சிம்லா, ஆக. 2- இமாசல பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் கொட்டித்தீர்த்த மழையால் அங்கு பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
இமாசலப்பிரதேசத்தின் தலைநகர் சிம்லா, குறு மற்றும் மண்டி ஆகிய மாவட் டங்களில் 31.7.2024 அன்று நள்ளிரவில் அதிகனமழை கொட் டியது, ஒரே சமயத்தில் கொட்டித்தீர்த்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்ததில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத் தில் மூழ்கின. மேலும் ஏரான மான வீடுகள், மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத் தில் அடித்துசெல்லப்பட்டன. அதி கனமழை மற்றும் வெள்த்தில் சிக்கி 3 பக்தர்கள் பலியாகினர். மேலும் சுமார் 50 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களின் கதி என்ன ஆனது என்பது பற்றித் தெரியவில்லை.
தீவிர மீட்புப் பணிகள்
மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஒருசில இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மீட்பு பணிகள் சவாலானதாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆளில்லா விமா னங்களின் உதவியுடன் காணா மல் போனவர்களை கண்ட றிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
அமித்ஷா ஆய்வு
அதி கனமழையால் சிம்லா மாவட் டத்தில் உள்ள மலானா அணையில் உடைப்பு ஏற்பட்டதாகவும், எனினும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதாகவும், இதனால் அந்த முக்கிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகிய இருவரும் இமாசலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகுவிடம் தொலைபேசியில் பேசி, மழை, வெள்ளத்தால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்தனர்.
அப்போது மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்கும் என்றும், மீட்புப் பணிகளுக்கு ராணுவம் மற்றும் விமானப்படை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
உத்தராகண்டிலும் கடும் மழை
இந்த நிலையில் இமாசலப் பிரதேசத் தின் அண்டை மாவட்டமான உத்தரா கண்டிலும் அதி கனமழை வெளுத்து வாங்கியது. தலைநகர் டேராடூன், ஹரித்வார், நைனிடால், சாமோலி ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கடும் மழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
குடியிருப்புப் பகுதிகளை வெள் ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
12 பேர் பலி
கனமழை, வெள்ளம் காரண மாக பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. ஹரித்வார் மாவட்டத்தின் பார்பூர் கிராமத்தில் சாலையோர விடுதி ஒன்றின் மண் சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். இதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான நிகழ்வுகளில் மேலும் 9 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் பச்சிளம் குழந்தைகள் உள்பட பலர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.
450 பக்தர்கள் மீட்பு
கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், பிம்பலி சவுகி என்ற இடத்துக்கு அருகே 20-25 மீட்டர் நடை பாதை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாலும் அந்த பகுதிகளில் சிக்கித் தவித்த 450 பக்தர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சாலைகளை சீரமைக்கும் வரை கேதார்நாத் பயணத்தை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பயணத்துக்கான புதிய பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.