கொல்கத்தா. ஜூன் 28– மேற்கு வங்காளத்தில் திரிணா முல் காங்கிரஸ் குட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெ டுக்கப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க முடியாமல் 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். அதை தடுக்க ஆளுநருக்கு உரிமை யில்லை என்று மம்தா கூறினார்.
பதவிப்பிரமாண விழாவில் சிக்கல்
மேற்கு வங்காளத்தில் முதல மைச்சர் மம்தா பானர்ஜி – ஆளுநர் ஆனந்த போஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அங்கு 2 தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சயந்திகா பந்தோ பாத்யாய் மற்றும் ரயத் உசைன் சர்கார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வழக்கப்படி சட்டப் பேரவையில் பதவி பிரமாணம் ஏற்க வேண்டும். ஆனால் ஆளுநர், அவர்களை தனது அலுவலகமான ஆளுநர் மாளிகைக்கு வந்து பதவியேற்கும்படி கூறியிருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மரபுப்படி சட்ட பேரவையில் பதவியேற்க விரும்பினர்.
நேற்று முன்தினம் (26.6.2024) சட்டப் பேரவை கூடியபோது 2 புதிய உறுப்பினர்களும் ஆளுநரின் வருகைக்காக பதவியேற்க காத்திருந்த னர். ஆனால் மாலை வரை காத்திருந்தும் ஆளுநர் வரவில்லை. அவர் டில்லி சென்று விட்டார். இதனால் புதிய உறுப்பினர்கள் கையில் பதாகையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-ஆவது நாளாக போராட்டம்
இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாகவும் நீடித்தது. அம்பேத்கர் சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட னர். இந்த விவகாரம் குறித்து மம்தா நேற்று (27.6.2024) தலைமைச்செய லகத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- எங்கள் கட்சியின் புதிய உறுப்பி னர்கள் வெற்றி பெற்று ஏறத்தாழ ஒருமாத காலம் ஆகிவிட்டது. அவர்களால் இன்னும் பதவியேற்க முடியவில்லை. ஆளுநர் அவர்களை பதவியேற்கவிடாமல் தடுக்கிறார். அவர்களின் நேரம் வீணாகிறது. அவர்களை தேர்ந்தெ டுத்தது மக்கள்தான். ஆளுநர் அல்ல. பதவிப்பிரமாணம் செய்ய உரிமை உள்ளது. இந்த செயல் முறையை தடுக்க ஆளுநருக்கு உரிமை இல்லை.
பெண்கள் அச்சம்
பதவிப் பிரமாணத்திற்காக எல்லோரும் ஏன் ஆளுநர் மாளி கைக்கு செல்ல வேண்டும். சட்ட பேரவைக்கு ஆளுநர் வரலாம். அவரால் வர முடியாவிட்டால் பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரிடம் பதவிப் பிரமாணம் செய்யும் பொறுப்பை ஒப்படைக்கலாம். சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவங்களால் அங்கு செல்ல பயப்படுவதாக பெண்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.