சென்னை. ஜூன் 27- வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக்கு சட்டத்து றை அமைச்சர் ரகுபதி பதில ளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று (26.6.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உண்மைக்கு புறம்பான செய்தி
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், சட்டமன்றத்தில் முன்மொழிந்த ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தீர்மானம் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஜாதிவாரியான கணக்கெடுப்பு குறித்தோ, அதை பாட்னா உயர்நீதி மன்றம் தடை செய்தது என்றோ முதலமைச்சர் எதுவும் பேசவில்லை. முதலமைச்சரின் உரை, சட்டமன்ற குறிப்பேடுகளில் உள்ளது. எனவே, அன்புமணி ராமதாஸ் உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுவெளியில் பரப்ப வேண்டாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து, உச்ச நீதிமன்ற தெளிவாக தீர்ப்பு அளித்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுப்பதற்கு எந்த தடையும் கிடையாது எனவும், தரவுகளை சேகரித்து, இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் 10.5 சதவீதம் வன்னியர் உள்இடஒதுக்கீடு வழங்க இயற்றப்பட்ட சட் டம், தேர்தல் ஆதாயத்துக்காக, அவசர கோலத்தில், தக்க தரவுகள் இல்லாமல் இருந்த தால் அந்த சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சட்டசபையில் தீர்மானம்
முழுமையான ஜாதிவாரி யான மக்கள்தொகை விவரங் கள் இல்லாத நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அடிப்படையிலான தரவுகளை மட்டும் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங் கிய நிலைக்கான காரணங்க ளாக எடுத்துக் கொண்டு முடி வெடுக்க இயலாது என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றமும் தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் குறிப்பிட்டுள்ள மேற்சொன்ன காரணங்களால் தான் முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா கிறது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது . எனவே தான், அதனை வலியுறுத்தி இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக…
அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் நடைபெ றும் காலங்களில் மட்டும் 10.5 சதவீ தம் இட ஒதுக்கீடு குறித்து பேசி பா.ம.கமக்களை ஏமாற்றி வருகிறது.
அனைத்து மக்களுக்கும் பய னுள்ளதாக அமைய இடஒதுக் கீடு குறித்து முழுமையாக ஆராய்ந்து, நீதிமன்றங்களில் சட்டங்கள் ரத்து செய்யப்படா மல் நிலைத்து நிற்கும் வகையில் சரியான வழிமுறைகளை பின் பற்றி செய்யப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.