ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை ஓராண்டு பயண நிறைவு வெறுப்புணர்வு ஒழியும் வரை எங்கள் நடைப் பயணம் தொடரும் : ராகுல் உறுதி

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி செப் .8 இந்திய ஒற்றுமை  நடைப் பயணத் தின் ஓராண்டு நிறைவை யொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள் ளார். அதில், ‘இந்திய ஒற் றுமை நடைப் பயணத்தின்  அன்பை நோக்கிய நடைப் பயணம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக மாறியுள்ளது. இந்த பயணம் தொடரும்.. வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை. இது என்னுடைய வாக்குறுதி’ என ராகுல் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தை பாராட்டி பல்வேறு தலைவர்கள் பதிவிட்டுள்ளனர். 4,000 கி.மீ. பயணத்தை பாராட்டி உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது மக்கள் இயக்கம் என்றும் வரலாற்றில் ஈடு இணையற்றது என்றும் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *