புதுடில்லி, மே.14-சிறந்த கல்வி, 24 மணி நேர மின்சாரம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வழங்கி இருக்கிறார்.
‘கெஜ்ரிவாலின் உத்தரவாதம்’
மதுபான கொள்கைமுறை கேடு வழக்கில் இடைக்கால பிணையில் வெளிவந்துள்ள ஆம் ஆத்மி ஒருங் கிணைப்பாளரும், டில்லி முதலமைச் சருமான கெஜ்ரிவால் முழு வீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு நடுவில் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று (12.5.2024) அவர் வெளியிட்டார்.
ஆளும் பா.ஜனதா ஏற்கெனவே ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதைப்போலவே ‘கெஜ்ரிவாலின் உத்தரவாதம்’ என்ற பெயரில் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்து அவர் வெளி யிட்டு உள்ளார்.
10 பணிகளுக்கு உறுதி
இந்த தேர்தல் அறிக்கையில் 10 பணி களுக்கு அவர் உறுதி அளித்து இருக்கிறார்.
அவை வருமாறு:-
* நாடு முழுவதும் 24 மணி நேர தடையற்ற மின்சாரம்.
* அனைவருக்கும் சிறந்த கல்வி உறுதி.
* கிராமப்புறங்களிலும் சுகாதார வசதிகள் மேம்படுத்தல்.
* சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகள் மீட்பு.
* அக்னிவீர் திட்டம் ரத்து. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப் படி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி.
* டில்லிக்கு முழு மாநிலத் தகுதி.
* ஆண்டுதோறும் 2கோடி வேலை வாய்ப்பு உருவாக்கம்.
* தடையற்ற வர்த்தகம் மற்றும் வியாபாரம் உறுதி.
* ஊழல் ஒழிப்பு.
மேற்கண்ட வாக்குறுதிகள் அதில் கூறப்பட்டு இருந்தன.
மக்களே முடிவு செய்யலாம்
இந்த அறிக்கையை வெளியிட்டு பேசும்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-
இந்த வாக்குறுதிகள் தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் நான் ஆலோசிக்கவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இந்த உத்தரவாதங்களை நிறைவேற்ற கூட்டணி கட்சிகளை நான் வலியுறுத்துவேன்.
டில்லியில் ஆம் ஆத்மி வாக்களித்த இலவச மின்சாரம், சிறந்த பள்ளிகள், மொகல்லா கிளினிக்குகள் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி விட் டோம். ஆனால் பிரதமர் மோடி ஏற் கெனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கெஜ்ரிவாலின் உத்தரவாதம் ஒரு முத்திரை போன்றது. மோடியின் உத்தர வாதமா? அல்லது கெஜ்ரிவாலின் உத்தரவாதமா? என்பதை மக்களே தேர்வு செய்யலாம்.
பா.ஜனதாவின் வாஷிங் மெஷின்
டில்லியிலும், பஞ்சாப்பிலும் 24 மணி நேர மின் வினியோகத்தை உறுதி செய்து வருகிறோம். இதை நாங்கள் ஒட்டுமொத்த இந்தியாவிலும் செய்ய முடியும். நாட்டில் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளது. எனவே நாடு முழுவதும் சிறந்த கல்விக்கு ஏற்பாடு செய்வோம்.
நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் அவற்றை நாங்கள் மீட்போம்.
அனைத்து ஊழல்வாதிகளையும் பா.ஜனதா தன்னுடன் சேர்த்துக் கொண்டு உள்ளது. பா.ஜனதாவின் வாஷிங் மெஷினை நாங்கள் பொது வெளியில் அழிப்போம். நாட்டில் தடையற்ற வர்த்தகம் மற்றும் வியா பாரத்தை உறுதி செய்ய திட்டம் உருவாக்கப்படும்.
-இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
டில்லியில் வாகன பேரணி
டில்லியில் நேற்று முன்தினம் (12.5.2024) மாலையில் கெஜ்ரிவால் மீண்டும் வாகன பேரணி நடத்தினார். மோதி நகரில் நடந்த இந்த பேரணியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்சிங் மன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பேரணியில் கெஜ்ரிவால் பேசும் போது, ‘நான் 20 நாட்களுக்குப்பின் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால், டில்லியில் 25ஆம் தேதி நடைபெறும் தேர்தலின்போது நீங்கள் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்தால். நான் மீண்டும் சிறைக்கு செல்ல மாட் டேன்’என்று கூறினார்.