ராகுல் காந்தியே பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இதேபோல்தான் காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம்களுக்கானது என்றும் பேசியதுண்டு. எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களை எதிரிகளாக சித்தரிப்பது பிஜேபியின் சித்தாந்தமாகவே ஆகி விட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதத்தை முன்னிறுத்துவது குற்றமென்று தேர்தல் ஆணைய விதிமுறைகள் கூறுகின்றன. நீதி மன்றத் தீர்ப்புகளும் உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து பிரதமர் பேசுகிறார் என்றால், தேர்தல் தோல்வி காரணமாக தடுமாறுகிறார் பிரதமர் என்று கருத இடம் இருக்கிறது.