குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஏப்.25 இந்த ஆண்டுக்கான திருத்தப் பட்ட தேர்வு காலஅட்ட வணையை வெளியிட் டுள்ள டிஎன்பிஎஸ்சி, இனிமேல் குரூப்_-2 பணிக ளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும், குரூப்-2ஏ தேர்வு முறை யிலும் மாற்றம் செய்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
2024-_ஆம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை கடந்த 20.12.2023 அன்று வெளியிடப்பட்டது. தற்போது தேர்வர்களின் நலன் கருதியும், தேர்வு முறைகளை விரைந்து செயல்படுத்தவும், தொழில் நுட்ப பதவிகளுக்காக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளை ஒருங்கிணைத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2ஏ தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுத் திட்டத்தை மாற்றியமைத் தும் 2024-ஆம் ஆண்டுக் கான தேர்வு கால அட்ட வணை திருத்தியமைக் கப் பட்டுள்ளது. இது தேர் வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருத்தப் பட்ட புதிய தேர்வு கால அட்டவணையின்படி, மொத்தம் 2,030 காலியிடங்களை நிரப்பும் வகை யில் ஒருங்கிணைந்த குரூப்-_2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜுன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அற்கான முதல்நிலைத் தேர்வு செப். 28-ல் நடை பெறஉள்ளது. குரூப்-_2, 2ஏ தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-2 பணி களுக்கு இனிமேல் நேர் முகத்தேர்வு கிடையாது. மெயின் தேர்வு மதிப் பெண் அடிப்படையில் பணி நியமனம் நடை பெறும். மெயின் தேர்வு (பொது அறிவு மற்றும் கட்டாயத் தமிழ் தகுதித் தாள்) வழக்கம்போல் விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக் கும். குரூப்-_2ஏ மெயின் தேர்வில் பொது அறிவு பகுதியில் விரிவாக விடையளிக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது. பொது அறிவு மற்றும் புதி தாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் அல்லது ஆங்கிலம் தாள் தேர்வில் அப்ஜெக் டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

கட்டாய தமிழ் தகுதித் தாள் மட்டும் விரிவாக விடையளிக்கும் வகையில் இருக்கும்.
புதிய தேர்வுமுறை காரணமாக, குரூப்-2ஏ-யின் கீழ் இருந்த நகராட்சி ஆணையர் (கிரேடு-2), தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ) உள்ளிட்ட பதவிகள் தற் போது குரூப்-2-வுடன் சேர்க் கப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கூறும்போது, குரூப்-_2 பணிகளுக்கு நேர் முகத் தேர்வை நீக்கியிருப் பதை வரவேற்கிறோம். மெயின் தேர்வு நடத் துவதால் தேவையில் லாமல் காலதாமதம் ஏற் படும். எனவே, குரூப்_-2ஏ பணிகளுக்கு மெயின் தேர்வை நீக்குமாறு டிஎன் பிஎஸ்சி-க்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *