புதுடில்லி,ஏப்.25- உ.பி.யில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த வழக்கில் பா.ஜ.க. அமைச்சரின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா பிணை பெற்று வெளியே வந்து தற்பொழுது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற் பது விதிமீறல் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது-
கடந்த 2021இல் மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட் டம் நடத்தினர். 2021 அக் டோபர் 3 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம் பூர்கேரியில் நடைபெற்ற போராட்ட பேரணியை ஒடுக்கும் நோக்கத்தில், விவசாய பேரணி கூட் டத்திற்குள் அதிவேகமாக காரை புகுத்தி விவசாயிகள், பத்திரிகையாளர் என 5 பேரை கொன்றான். ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா. இது தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப் பட்ட நிலை யில், கடந்த ஆண்டு ஆஷிஷ் மிஸ்ரா நிபந்தனையுடன் இடைக் கால பிணை பெற்றார்.
இந்நிலையில், நிபந் தனை பிணை பெற்றுக் கொண்டு அரசியல் நிகழ்வு, தேர்தல் பிரச்சாரம் உள் ளிட்ட பொது நிகழ்ச்சி களில் ஆஷிஷ் மிஸ்ரா பங்கேற்ப தாக லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத் தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலை யில், விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.விசா ரணை வாதத்தின் பொழுது பிரசாந்த் பூஷன், ”லக் கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் இடைக் கால பிணை பெற்றுள்ள ஆஷிஷ் மிஸ்ரா நிபந் தனைகளை மீறி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள் கிறார்” என குற்றம் சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “பிணை விதிகளை மீறி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தவறானதாகும். இதற்கு மேல் ஆஷிஷ் மிஸ்ரா பொது நிகழ்ச்சி களில் கலந்து கொண் டால் பிணை நிபந்தனை களை மீறுவதாக அமை யும்” என எச்சரிக்கை விடுத்தனர்.