பெங்களுரு, ஏப். 24- நிதி ஒதுக் கீட்டில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண் டித்து பெங்களூருவில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (23.4.2024) ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக் கீடு செய்வதில் ஒன்றிய பா.ஜ.க., அரசு, மாற்றாந்தாய் மனப் பான்மையோடு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட் டும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மழை வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் உள்ளிட்டவற்றை வழங்காமல் மோடி அரசு அநீதி இழைத்து வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண் டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடை பெற்று வருகின்றன.
அந்தவகையில், கருநாடகா விற்கு வறட்சி நிவாரணமாக ஒரு ரூபாய் கூட வழங்காத மோடி அரசைக் கண்டித்து பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விதான் சவுதாவில் உள்ள காந்தியார் சிலை முன் பதா கைகளை ஏந்தி மறியல் போராட் டம் நடத்தினர்.
கருநாடகாவில் வரும் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக் கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிரான இந் தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருநாடகாவில் 223 தாலு காக்களில் கடும் வறட்சி நிலவு கிறது. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன் றிய அரசிடம் கோரிக்கை வைத்தோம்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்
பரிசீலனை செய்வதாக கூறிய அவர்கள், இந்த நிமிடம் வரை ஒரு ரூபாய் கூட கொடுக் கவில்லை.
அதனால்தான் இங்கு போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகி யுள்ளது. இனியாவது கொடுக்க வேண்டிய வறட்சி நிவாரண உதவியை உட னடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரசார் தெரிவித்தனர்.