தருமபுரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெ.கோவிந்தராஜின் மகள் கோ.தமிழினி (நான்காம் வகுப்பு) மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசை வென்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். உடன்: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் கோகிலா ஆகியோர் உள்ளனர்.