சென்னை, ஏப்.1- நூறுநாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் தினக்கூலியை உயர்த்தியது பிரதமர் மோடியின் தேர் தல் நாடகம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மத்தியக்குழு விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளர் பி. வெங்கட் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தான் தோன்றித் தனமான அறிவிப்பு
திறன் பெறாத உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு மாநில வாரியான ஊதிய விகிதங்களுக்கான ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அறிவிப்பை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மத்திய செயற்குழு வன் மையாகக் கண்டிக்கிறது.
இந்த அறிவிப்பின் மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (MGNREGA) தொழிலாளர் களின் ஊதியம் திருத்தப்பட்டது. ஆனால், ஊதிய உயர்வு என்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்று வதற்குப் போதுமானதாக இல்லை.
குறைந்தபட்ச ஊதியம் இன்னும்
உறுதி செய்யப்படவில்லை
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் குறைந்து வரு வதைக் கருத்தில் கொண்டு, அமைச்சகம், உரிய அளவில் ஊதிய திருத்தத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட் டது. ஆனால் பன்னாட்டுத் தொழி லாளர் அமைப்பின் ஆய்வு விவரம் சமீபத்திய ஆண்டுகளில் கிராமப்புற இந்திய ஊதியங்களின் வாங்கும் திற னில் எதிர்மறையான போக்குகளை சுட்டிக்காட்டுகிறது.
அதாவது இந்தியத் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தால் வெளியிடப்பட்ட கிராமப்புற மாத ஊதியக் குறியீட்டுடன், பண வீக்கத் தரவுகளின் அடிப்படையில், நிதி அமைச்சகம் சமீ பத்திய ஆண்டுகளில் கிராமப்புற இந் திய ஊதியங்களின் வாங்கும் திறனில் எதிர்மறையான போக்குகளைக் கண்ட றிந்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய ஊதிய திருத்த மானது மோசமான நிலைமையை நிவர்த்தி செய்வதிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத் தின் உரிமையை உறுதி செய்வதிலும் தோல்வியடைந்தது.
மற்ற தொழிலாளர்களைவிடக் குறைவு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் (விநிழிஸிணிநிகி) சட்டம், 2005இன் பிரிவு 6, குறைந்தபட்ச ஊதி யச் சட்டம், 1948 இல் இருந்தபோதிலும், ஒன்றிய அரசு, அறிவிப்பின் மூலம், வெவ்வேறு பகுதிகளுக்கு வேறுபட்ட ஊதிய விகிதத்தை சட்டத்தின் நோக்கங் களுக்காகக் குறிப் பிடலாம்.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஊதி யம் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஊதியத்தை விட குறைவாக இருக்கக்கூடாது என் பதை இந்த விதி மேலும் குறிக்கிறது.
ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மீதான நிலைக்குழு தனது அறிக்கையில் (நாடாளுமன்றத்தில் 8 பிப்ரவரி 2024 அன்று வைக்கப்பட்டது) 2008 ஆம் ஆண்டு முதல் ஊதியத்தின் அளவைக் கவனித்து, ஊதியங்கள் போது மானதாக இல்லை என்றும், வாழ்க்கைச் செலவு அதி கரிப்புக்கு இணங்கவில்லை என்றும் பரிந்துரைத்துள்ளது. இத்தரு ணத்தில், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கட்டடத் தொழிலாளி/இதர வேலைகளில் ஈடுபட்டுள்ள பிற தொழி லாளர்கள் ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் உத்தர வாதம் அளிக்கப்பட்ட கூலியை விட தினசரி ஊதியம் அதிக மாக உள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் போன்றவற்றில் பாதுகாப்பு உணர்வை வழங்குவதிலி ருந்து இவ்வளவு பெரிய அளவிலான ஊதிய உத்தரவாதம் அளிக்கும் கிராமப் புற வேலைவாய்ப்புத் திட்டம் தேவை என்று குழு கருதியது. குறைந்தபட்ச ஊதியத்திற்கான ஒன்றிய அரசின், அனூப் சத்பதி கமிட்டி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.375- ஊதியமாக இருக்க வேண்டும் என்று பரிந்து ரைத்தது.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான மோடி அரசின் கொள்கை
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரைகளை முற்றிலுமாக புறக்கணித்தது.
ஊரக வேலை திட்டத் திற்கு எதிரான கொள்கையளவில் பெரும் கார்ப்ப ரேட்டுகள் மற்றும் நிலப்பிரபுக் களின் நலனுக்காக செயல்படுகிறது. கிராமப் புற ஏழைகளின் வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரம் மேம்படு வதில் கிராமப்புற வேலை உறுதித் திட்டமானது தனது தகுதியை நிரூபித்த போதிலும், மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் திட்டத்தை அழித்திடவே முற்பட்டது.
நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் மோடி அரசாங்கத்தின் வழிகாட்டும் சக்தியாகும். இது ஊரக வேலைத்திட்டத்தை தேவையற்றதாக கருதுவது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று அழைக் கப்படுவதற்கு தடையாகவும் உள்ளது.
தொழிலாளர்களும் அவர்களது அமைப்புகளும் குறைந்தபட்சம் ரூ.600 தினக்கூலியைக் கோருகின்றனர். அதை உறுதி செய்யாத மோடி அரசுக்கு எதிராக அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் அனைத்து மட்ட கமிட்டிகளும் தற்போதைய பற்றாக் குறை ஊதிய அறிவிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் தோறும் பிரச்சாரம்
இந்நிலையில், தேர்தல் நாடகத்தின் ஒரு பகுதியாக நூறுநாள் வேலைத் திட்ட கூலியை சிறிய அளவிலே உயர்த்தி யுள்ள ஏழைகள் விரோத மோடி அரசை அம்பலப்படுத்தி கிராமங்கள் தோறும் பிரச்சாரம் நடத்துமாறு சங்கத்தின ருக்கு அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்ன துரை, மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில், வேலையின்மை- உயர்த்தப்பட்டுள்ள விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட் டுள்ள கிராமப்புற ஏழைகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு
திட்டத்தின் தினக்கூலியை ரூ. 600 ஆக உயர்த்தி அறிவிக்க வேண் டும், வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.
இதுதான் இப்போதைய உடனடித் தேவை என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். மோடி அரசு இந்த அடிப்படையில் வேலை- கூலி விகிதத்தை உயர்த்தி அறிவிக்க மறுக்கும் கிராமங்கள் தோறும் மோடி அரசை அனைத்து வகையிலும் அம்பலப் படுத்தி சங்கத்தினர் பிரச்சாரத்தை நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.