எப்படி மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும்?
மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி., கேள்வி
சென்னை, மார்ச் 30- இந்திய நீதித்துறைக்கு அல்லாத முத்திரைத்தாளுக்கும், நீதிமன்றங்களில் பயன் படுத்தப்படும் இந்தியா நீதிமன்ற கட்டண முத்தி ரைத்தாளுக்கும் வித்தியா சம் தெரியாத அண்ணா மலை எப்படி மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும் என மூத்த வழக் குரைஞர் திமுக மாநிலங் களவை உறுப்பினர் பி. வில் சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட் டுள்ள வில்சன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு அரசியல்வாதி, மற்றவர் களை “UPSC தேர்வு எழுத முடியுமா என சவால் விடுவதாகவும் மேலும் அவர் ஒரு அய்.பி.எஸ். அதிகாரி என்று அடிக் கடி பெருமை பேசுவதா கவும் குறிப்பிட்டுள்ளார்.
India Non Judicial முத்திரைத்தாளுக்கும், நீதிமன்றங்களில் பயன் படுத்தப்படும் India Court Fee முத்திரைத்தாளுக்கும் வித்தியாசம் தெரியாத அய்பிஎஸ் அதிகாரியா அவர்? எனவும் இப்படிப் பட்ட நபர் கோவை மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் எப்படி பணியாற்ற முடி யும்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
முத்திரைத்தாள்க ளின் வித்தியாசத்தை தெரியாத ஒருவர் சட்டங் கள் மற்றும் கொள்கை களை நிறைவேற்றுவதில் எவ்வாறு திறம்பட பங் காற்ற முடியும்? என்றும் வில்சன் பதிவிட்டுள்ளார்.