ஊட்டி, மார்ச்.27- ஊட்டியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.தி.மு.க., பா. ஜனதா நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
வேட்புமனு நீலகிரி (தனி ) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜனதா வேட்பாளர் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன், அ.தி. மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று (25.3.2024) முன்தினம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலம் செல்ல அனுமதிக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறி காவல் துறையினரின் தடுப்பைமீறி, காவல்துறை கண்காணிப்பாளரின் வாகனத்தை தாக் கியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஊர் வலமாக பா. ஜனதா வினரும், அ.தி.மு.க.வினரும் டி.பி.ஓ. சந்திப்பில் ஒரே நேரத்தில் திரண்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து காவல் துறை கண் காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், கூட் டத்தை கலைக்க பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதை கண்டித்து இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியலில் ஈடு பட்டது. பட்டாசு வெடித்தது, காவல் துறையினரை பணிசெய்யவிடாமல் தடுத் தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பிஜேபி மீது ஊட்டியில் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப்பதிவு
Leave a Comment