பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் எதுவும் இல்லை பேரவைத் தலைவர் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 15 தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டாலும், அமைச் சராக பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பிரச்சினை இல்லை என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
மேனாள் அமைச்சர் க.பொன் முடிக்கு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைதண்ட னையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அவர் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதினார்.
ஆனால், ஆளுநர் ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்று (14.3.2024) காலை டில்லி புறப்பட்டுச் சென் றார். அங்கு அவர், அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்வது தொடர்பாக சட்டரீதியாக ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தச்சூழலில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தூத்துக்குடி செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந் தார். அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில ளித்ததாவது:
பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்வதைத் தவிர்க்க ஆளுநர் டில்லி சென்றாரா என்பது தெரியவில்லை. அவ்வாறு சென்றிருக்க மாட்டார் என நம்பு கிறேன். ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருக்கும் பட்சத்தில் அவர் சென்றிருக்கலாம். டில்லியில் இருந்து வந்தபின், பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என நம்புகிறேன்.
அதேபோல், மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கும், பொன் முடி அமைச்சர் பதவியேற்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.முதலமைச்சர் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று பரிந் துரைத்து ஆளுநருக்கு கடிதம் அனுப்புகிறாரோ அவரை அமைச் சராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதே நடைமுறை. இதில் சிக்கல், கடினம் எதுவும் இருக்காது.அதேபோல், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக் கும்போது, அமைச்சர் பதவியேற் பில் எந்தவித சட்டச்சிக்கலும் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது.முன்னுதாரணம் உள்ளது: ஏற்கெனவே, நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, ராஜஸ் தானில் ஒருவர் அமைச் சராகப் பதவியேற்ற முன்னுதா ரணம் உள்ளது. அதேபோல் பொன்முடி அமைச்சராகலாம்.நாட்டில் ஒரு மாநிலத்தில் உள்ள நடைமுறைதான் மற்ற மாநிலங் களுக்கும் பொருந்தும் என்பதால், பொன்முடி பதவியேற் பதில் சிக்கல் இல்லை. இவ்வாறு
மு.அப்பாவு தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *