வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பு

viduthalai
2 Min Read

நாகர்கோவில், மார்ச் 8-வேளாண் இடுபொருட்கள் பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவை இடு பொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிலையம் (MANAGE), அய் தராபாத் மூலமாக வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இப்படிப்பு விவசாயிகள் பயன் பெறும் வகையிலும், தேவையை அறிந்து சரியான தருணத்தில் விவ சாயிகள் பயன்படுத்த வேண்டிய இடுபொருட்களை வழங்கிடவும், வேளாண் விரிவாக்கத்தில் ஈடு பட்டு வரும் களப்பணியாளர்க ளுக்கு துணையாக செயல் புரியவும் பயனுள்ளதாக அமையும். மேலும் வேளாண் இடுபொருள் விற்க உரிமம் பெறுதல், புதுப்பித்தல் செய்ய வேண்டுபவர்களும் இப் படிப்பில் இணைந்து பயன் பெறலாம்.

இப்பட்டய படிப்பினை சுய திதி மூலமாகவும் (Self-Finance) ஒன்றிய அரசின் 50 சதவீத மானிய நிதியுடனும் கற்றுத் தேரலாம். சுயநிதி முறையில் படிப்பதாக இருந்தால் ரூபாய் 20,000/-மும் ஒன்றிய அரசின் 50 சதவீத மானிய நிதி மூலமாக பயில்வதாக இருந்தால் ரூபாய் 10,000/-மும் வேளாண் இடுபொருள் விற்பனை நிறுவனங்கள் மூலமாக படிப்பதாக இருந்தால் அந்நிறுவனம் ரூபாய் 10,000/-மும் மீதமுள்ள ரூபாய் 10,000/- ஒன்றிய அரசு மற்றும் இடுபொருள் விற்பனையாளரும் தலா ரூபாய் 5,000/- வீதம் படிப்பு தொகையினை செலுத்த வேண் டும்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந் தால் (Pass / Fall) போதுமானதாகும்.
ஓராண்டு பட்டயப் படிப்பு வாராந்திர வகுப்புகளாக அதாவது வாரந்தோறும் சனி மற்றும்
ஞாயிறு அல்லது விற்பனை விடு முறை நாளில் பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப் படும்.
ஒரு அணிக்கு கட்டாயம் 40 நபர்கள் இருக்க வேண்டும். மொத்தம் 48 நாட்களில் 40 நாட் கள் 80 வகுப்பறை வகுப்புகளும். 8 நாட்கள் கண்டுணர்வு வகுப்பு களும் நடத்தப்படும்.
மேலும் கூடுதல் விவரங்கள் பெற https://www.manage gov in/daesi/guidelines pdf என்ற இணைய பக்கத்திலும் அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களையும் அணுகலாம். இப்பட்டயப் படிப்பில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் பங்கேற்று பயனடைந்திட கேட் டுக் கொள்ளப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *