மும்பை, மார்ச் 2 மகாராட்டிராவில் எதிர்க்கட்சிக் கூட்டணி யான ‘மகா விகாஸ் அகாடி கூட்டணி’ கட்சி களிடையே, மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது!
. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா – 20, காங்கிரஸ் – 18, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் – 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பஹுஜன் அகாடிக்கு(ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கம்) சிவசேனாவில் இருந்து 2 தொகு திகள் ஒதுக்கப்படுகிறது.
மகாராட்டிரா மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு!
Leave a Comment