பிரதமர் மோடி பேசிய கூட்டத்தில் ராகுல் காந்தி

viduthalai
1 Min Read

ஸ்டிக்கர் ஒட்டிய நாற்காலிகள் பொதுமக்கள் கேலி
மும்பை, பிப்.29- மராட் டிய மாநிலம் யவத் மாலில் நேற்று (28.2.2024) பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத் தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரை ஆற்றி னார். மேலும் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த பொதுக் கூட் டத்தில் பார்வையாளர் கள் அமருவதற்காக ஏராளமான பிளாஸ் டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந் தன. இந்த பிளாஸ்டிக் நாற்காலிகளின் பின்புறம் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஸ்டிக்கரில், 138 ஆண்டுகளாக வளமான இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடுகிறோம்’ என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. இது சல சலப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *