விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

viduthalai
3 Min Read

தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு
ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு
அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை,பிப்.27- கூட்டுறவுத் துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப் பட்டு வரும் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்திலி ருந்து ரூ.25 லட்சமாக உயர்த் தப்பட்டுள்ளது என்று கூட்டு றவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக் களும், விவசாயிகளும் பயன் பெறும் வகையில் பல்வேறு வகைக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு நிறுவனங் கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறியீட்டினை அதிகரித்து மறு நிர்ணயம் செய்து வழங்கப் பட்டுள்ளது.
விவசாயிகள், தங்களது மாவட் டங்களில் விளைபொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சொந்த கிடங்கு வசதி இல்லாத சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங் களுக்கு சொந்தமான கிடங்கு களை பயன்படுத்தி, தானியங் களை பாதுகாப்பாக இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
மேலும், உடனடி நிதி தேவைக் காக, தானியங்களுக்கு ஈடாக தானிய ஈட்டுக் கடனும் பெறும் நடைமுறையும் வழக்கத்தில் உள் ளது. தானியங்களின் சந்தை மதிப்பில், 75% வரை, 10% முதல் 11.75% வட்டியில் கடன் பெற லாம். இந்த தொகையை ஓராண்டு தவணையில், ஒரே நேரத்திலோ, மொத்தமாகவோ அல்லது பகுதி யாகவோ திருப்பிச் செலுத் தலாம்.

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 5,47,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4,047 கிடங்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில் 1,164 கிடங்குகள் ஏற்கனவே கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணை யத்தின் அங்கீகாரம் பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
இக்கடன், தொடக்க வேளாண் மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரு கிறது. 2023-2024ஆம் ஆண்டில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை ரூ.202.98 கோடி அளவிற்கு 4791 விவசாயிகள் கடன் பெற்று பயனடைந் துள்ளனர்.
அதன்படி, சில மத்தியக் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் தானிய ஈட்டுக்கடனின் உச்ச வரம்பை உயர்த்திட கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று கடன் குறியீட்டினை எய்த ஏதுவாகவும், பயனாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையிலும் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்திலி ருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு அறிவுரைகளை பின் பற்றி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் தானிய ஈட்டுக்கடன் வழங்குதல் தொடர்பாக ஏற்கெ னவே தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக உரிய துணை விதி திருத்தங்கள், ஒழுங்குமுறை விதி களில் திருத் தங்கள் மேற்கொள் ளவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் தாங் கள் விளைவிக்கும் நெல், மணிலா, மஞ்சள், சாமை, தினை உள்ளிட்ட தானியங்களை கூட் டுறவு சங்கங்களுக்கு சொந்த மான கிடங்குகளில் சேமித்து வைத்து, தானிய ஈட்டுக்கடன் பெறலாம். அதிக விலை கிடைக் கும் போது, தானியங்களை விற்பனை செய்து பயன் பெறலாம். இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *