டில்லி விவசாயிகள் போராட்டம் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி  பஞ்சாப் முதலமைச்சர் அறிவிப்பு

viduthalai
2 Min Read

சண்டிகர், பிப். 24- காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

விவசாய விளைபொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி டில்லியை நோக்கி போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் அந்த மாநில எல்லையான கனவுரி நகரில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய போது அரியானா காவல் துறையினர் ரப்பர் குண்டு களால் சுட்டு போராட்டக் காரர்களை கலைத்தனர்.

அப்போது பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங் என்பவர் உயிரி ழந்தார். இதையொட்டி அரி யானா காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியு றுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும் பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். விவசாயி சுப்கரன் சிங் குடும் பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஆயுதங்களுடன்…

இதனிடையே, டில்லி சலோ போராட்டத்தில் ஈட்டி, கேடயம் போன்ற ஆயு தங்களுடன் நிஹாங்சீக்கியர் கள் கலந்து கொண்டுள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த நிஹாங் சீக்கியர்கள் நேற்று முதல் டில்லி எல்லையான ஷம்பு பகுதியில் குவியத் தொடங் கினர்.

இந்த வகை சீக்கிய இனத் தவர் போரில் ஈடுபடும் வகை யைச் சேர்ந்தவர்கள். 17ஆ-ம் நூற்றாண்டிலேயே இவர்கள் வாள், ஈட்டி போன்ற பயிற்சி களில் ஈடுபட்டு பல்வேறு போர்களைச் சந்தித்தவர்கள். அந்த வழியில் வந்த நிஹாங் இனத்தைச் சேர்ந்த சீக்கியர் கள் தற்போது போராட்டத் தில் குதித்துள்ளனர்.

இதுகுறித்து நிஹாங் சீக் கிய இனத்தைச் சேர்ந்த ஷேர் சிங் கூறும்போது, “அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக போராடுமாறு சீக்கியர்களின் குருவான குரு கோவிந்த் சிங் எங்களுக்கு போதித்துள்ளார். எனவே, நாங்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள் ளோம்’’ என்றார். 2021-இல் நடை பெற்ற டில்லி போராட்டத் திலும் நிஹாங் இன சீக்கி யர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *