தூத்துக்குடியில் 2000 ஏக்கரில் விண்வெளி பூங்கா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, பிப்.21 தமிழ் நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் தூத்துக் குடியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண் வெளிப் பூங்கா அமைக் கப்படும் என்ற அறிவிப்பு, ‘கேளுங்கள் கொடுக்கப் படும்’ என்பதின் பலனாய் கிடைத்தாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மேனாள் இயக் குநரும், விஞ்ஞானியு மான மயில்சாமி அண் ணாதுரை எழுதிய ‘இந்தியா 75’ புத்தகத்தில், ‘தமிழ்நாட்டில் விண் வெளிப்பூங்கா’ என்ற தலைப்பில் ‘‘தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட் பம் 2030-இன் தொடர் முயற்சியில் அந்த உச்சக் கட்ட அறிவியல் தொழில் நுட்பத்தையும் இணைக்க முடிந்தால், இந்தியாவில் மட்டுமல்ல, பன்னாட்டு அளவில்கூட தமிழ்நாடு ஒரு முன்னணி இடத் தைப் பெற்று சிறக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழ்நாட் டின் குலசேகரப்பட்டினத் தில் புதிய ஏவுதளத்துடன், அதன் அருகிலேயே சிறிய அளவிலான செயற் கைக் கோள்களையும் உருவாக்கும் நிலையத் தையும் ஏற்படுத்தினால், குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த நம்மால் முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ் நாடு அரசின் 2024-_2025ஆ-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (19.2.2024) தாக்கல் செய் யப்பட்டது. இதில் சிறிய அளவிலான செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான விண்வெளித் தளத்தை தூத்துக்குடி மாவட்டத் தில் இஸ்ரோ நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது.
உந்து சக்தி பூங்கா: இதையொட்டிய பகுதிகளில் விண்வெளி சார்ந்த தொழிற்சாலை களை ஊக்குவிக்கும் வித மாக 2 ஆயிரம் ஏக்கரில் ஒரு விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வரவேற்பு அளித்துள்ள விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை, கூறியதாவது: இந்த முன்முயற்சியைக் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். நம் தமிழ்நாட்டின் குல சேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்தையும், அதற்கு அருகிலேயே சிக் கனமான சிறிய ஏவு கலன்கள், செயற்கைக் கோள்களை உருவாக்கும் ஒரு நிலையத்தையும் உரு வாக்கினால், உலகிலேயே மிகக் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் வாய்ப்பை நம்மால் பெற முடியும்.
இவ்வாறு ஏவுகலன் களுக்கான உதிரி பாகங்கள், எரிபொருள்களை உரு வாக்கும் நிலையங்களி னால் பல ஆயிரக்கணக் கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற் படும். நமது தமிழ் மண் ணுக்குப் பெரும் வரு வாயையும் கொண்டுவர முடியும். அந்தவகையில் தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை தூத்துக்குடி யில் 2 ஆயிரம் ஏக்கரில் அறிவிக்கப்பட்டுள்ள விண்வெளிப் பூங்கா, ‘கேளுங்கள் கொடுக்கப் படும்’ என்பதன் பலனாய் கிடைத்துள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *