திருவள்ளூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருத்தணி, பிப். 1- 27.-01.-2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருத்தணியில் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் பொறுப்பா ளர்கள் கலந்துரையாடல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.கிருஷ் ணமூர்த்தி, அறிவுச்செல் வன் ஆகியோரின் முன்னி லையில் சிறப்பாக நடந்தது.
மாநில பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் சி.நீ.வீரமணி,பெரியார் பெருந்தொண்டர் பொதட்டூர் புவியரசன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு. லோகநாதன் ஆகியோ ரின் கருத்துரைகளை அடுத்து இறுதியாக தலைமைக்கழக அமைப் பாளர் பு.எல்லப்பன் உரையில் கழக தெரு முனை பிரச்சாரம்,புதிய கிளைக்கழகங்கள், மீண்டும் அதிக அளவில் உறுப்பினர்களை உரு வாக்க வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் அனை வரின் ஒத்துழைப்புடன் விரைவில் அந்த அள வுக்கு மாவட்டத்தை உருவாக்க பாடுபடுவோம் என்று நிறைவு செய்தார்.
முன்னதாக செயல வைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களின் மறை விற்கு ஒரு நிமிடம் அமைதி மரியாதை செலுத்தி தீர்மா னங்களை தலைமைக்கழக அமைப் பாளரின் உரையில் கூறிய படி வாசிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *