திஸ்பூர், ஜன.22- காங்கிரஸ் நடைப்பயணத்தில் சேர வேண் டாம் என மக்களை அசாம் அரசு மிரட்டுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
3 மாநிலங்களை கடந்து…
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம்’ என்ற பெயரில் வடகிழக்கு மாநிலங் களில் நடைப்பயணம் மேற் கொண்டு வருகிறார்.
அதன்படி கடந்த 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த நடைப்பயணம் நாகா லாந்து, அசாம் மாநிலங்களை கடந்து 20.1.2024 அன்று அரு ணாசலபிரதேசத்துக்குள் நுழைந்தது.
அங்கு காங்கிரஸ் தொண் டர்கள் மற்றும் பொதுமக்கள் படைசூழ நடைப்பயணம் மேற் கொண்ட ராகுல்காந்தி தலை நகர் இடாநகரை சென்றடைந் தார். பின்னர் இரவில் அங்கேயே தங்கினார்.
மீண்டும் அசாம் சென்றார்
அதனை தொடர்ந்து நேற்று காலை அருணாசல பிரதேசம் இடாநகரில் இருந்து நடைப் பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி மீண்டும் அசாம் மாநி லத்துக்கு சென்றார்.
அங்கு பிஸ்வநாத் மாவட் டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த மாபெரும் பொதுக்கூட்டத் தில் கலந்து கொண்டு உரை யாற்றினார். அப்போது அவர் பேசிய தாவது: நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக நாங்கள் நீண்ட உரை களை மேற்கொள்வதில்லை. நாங்கள் ஒவ்வொரு நாளும் 7-8 மணிநேரம் நடைபயணம் செய் கிறோம். மக்கள் பிரச்சினை களைக் கேட்கிறோம். அந்த பிரச்சினைகளை அரசிடம் எழுப்புவதே எங்கள் நோக்கம்.
மக்களின் குரலுக்கான நடைப்பயணம்
அசாமில் காங்கிரசின் கொடிகள் மற்றும் பதாகைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. பா.ஜனதா தலைமையிலான மாநில அரசு இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணத்தில் சேர்வதற்கு எதிராக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
அதோடு நடைப்பயணத்தின் வழித்தடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மறுத்து வரு கிறது. மக்களை அடக்கிவிட லாம் என்று அவர்கள் (பா. ஜனதா அரசு) நினைக்கிறார்கள். ஆனால் இது ராகுல் காந்தியின் நடைப்பயணம் அல்ல, மக்க ளின் குரலுக்கான நடைப்பய ணம் என்பதை அவர்கள் உணர வில்லை. ராகுல் காந்தியோ அல்லது அசாம் மக்களோ உங் களை கண்டு பயப்படவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானா லும் செய்யலாம்.
தேர்தல் வரும் போது, பா.ஜனதாவை காங்கிரஸ் அமோக வாக்கு வித்தி யாசத்தில் தோற்கடிக்கும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
9 ஆண்டுகளுக்கு
முன்பு கடத்தல்
முன்னதாக ராகுல் காந்தி மீண்டும் அசாம் திரும்புவதற்கு முன்பு இடாநகரில், 9ஆண்டு களுக்கு முன்பு சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட வழக்குரைஞர் ஒருவரின் மருமகளை சந்தித்துப் பேசினார்.
அப்போது அந்த பெண் தனது மாமனார் கடத்தப்பட் டது குறித்தும், அவரை மீட்க பலவழிகளில் முயற்சித்து, எந்த பலனும் கிடைக்காதது குறித் தும் சோகத்துடன் ராகுல் காந்தியிடம் விவரித்தார்.
இது குறித்து தனது கவ லையை வெளிப்படுத்திய ராகுல் காந்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் இந்த விஷயத்தை எழுப் புவதாக உறுதியளித்தார்.
ராகுல் காந்தி நடைப் பயணம்
செய்தியாளர்கள் மீது
பிஜேபியினர் தாக்குதல்
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நேற்று (21.1.2024) அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நடந் தது. இதில் காங்கி ரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷூம் கலந்து கொண்டார்.ஜமுகுரி காட் பகுதியில் சென்றபோது ராகுல்காந்தியின் பிரதான பயணத்தில் இணைவதற்காக ஜெய்ராம் ரமேஷின் காரும் முன்னோக்கி சென்றது.
அப்போது பா.ஜனதாவினர் சிலர் அந்த காரை சூழ்ந்து கொண்டு தாக்கினர். அத்துடன் அதில் ஒட்டப்பட்டிருந்த காங் கிரஸ் ஸ்டிக்கர்களை கிழித்த அவர்கள், பா.ஜனதா கொடி ஒன்றை காரில் வைக்க முயன் றனர். இதைப்போல ராகுல் காந்தியின் நடைப் பயணம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களையும் அவர்கள் தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் தலையிட்டு பா.ஜனதாவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தாக் குதல் நிகழ்வு காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அசாமின் லகிம் பூரில் சென்றபோதும் ராகுல் காந்தி பயணத்தின்போதுமீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக பா.ஜனதா வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.