புதுக்கோட்டை, ஜன.19 புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் நேற்று (18.1.2024) நடைபெற்ற ஜல்லிக்கட்டைப் பார்வையிட வந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டை மான், செய்தியாளர்களிடம் கூறியது: ஆழ்கடல் மீன்பிடிப்பில் எல்லை என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. தமிழ்நாடு மீனவர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்களும் இங்கே கைது செய்யப்படு கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் அவ்வப்போது மீனவர்கள் விடுதலையும் செய்யப்படுகிறார்கள். எனவே, மீனவர்கள் பிரச்சினையில் சுமூகத் தீர்வு காண்பதற்கு, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.