சென்னை, டிச.24 தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2023) தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அமைதிப் பேரணி நடைபெற்றது.
தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை – அமைதிப் பேரணி
உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2023) காலை 9 மணியளவில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, ச. பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், தொழிலாளர்கள், பெரியார் பிஞ்சுகள் அணிவகுத்த இந்த மாபெரும் அமைதிப் பேரணி சிந்தாதிரிப்பேட்டை வழியாக பெரியார் திடலுக்கு வந்தடைந்தது.
அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை பேரணியாக வந்த தோழர்கள் புடைசூழ வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மலர் மாலை கழக மகளிரணி சார்பில் அணிவிக்கப்பட்டது.
பின்னர் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் 21 அடி முழு உருவச் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம். அப்துல்லா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் முன்னிலையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா. மணியம்மை, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த்தினி, ஆம்பூர் ஜெ. துரைசாமி மற்றும் மோகனா வீரமணி, பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) பொருளாளர் அருள்செல்வி, இரா. வெற்றிச்செல்வி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், பேராசிரியர் டெய்சி மணியம்மை, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பேராசிரியர் பெரியார் செல்வி, ஆடிட்டர் ஆர். ராமச்சந்திரன், திராவிடன் நிதி பொது மேலாளர் அருள்செல்வன், பேராசிரியர் தேவதாஸ், கொரட்டூர் ஜெயபாலன், பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன், கவிஞர் கண்மதியன், பத்திரிகையாளர் அண்ணாதுரை, முத்து.வாவாசி, மா.சேரன், திண்டிவனம் சிறீ.ராமுலு, கரூர் மாவட்ட துணைத் தலைவர் கவுதமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராஜன், சேத்பட் நாகராஜன், ‘பாசறை முரசு’ மு.பாலன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
அய்யா – அம்மா நினைவிடங்களில்…
பின்னர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திராவிடர் கழகம், திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக மகளிரணி, திராவிட தொழிலாளர் கழகம், பெரியார் நூலகர் வாசகர் வட்டம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், பெரியார் மணியம்மை மருத்துவமனை, திராவிடன் நிதி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
கழகப் பொறுப்பாளர்கள் – தோழர்கள்
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை டி.ஆர். சேதுராமன், மாரிமுத்து, வழக்குரைஞர் துரை. அருண், பி.டி.சி இராஜேந்திரன், சைதை தென்றல் வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், கி.இராமலிங்கம், பா. கோபாலகிருட்டிணன், ச. இராசேந்திரன், நா. பார்த்திபன், சி.பாசுகர், சொ.அன்பு, பெரம்பூர் பெ. இராசேந்திரன், கோ. தங்கமணி, பெ.செல்வராசு, தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், கோ. நாத்திகன், சு. மோகனராசு, சீ. இலட்சுமிபதி, ஆவடி மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க. இளவரசன், பூவை தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், இசை இன்பன், பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், க. இறைவி, செ.பெ. தொண்டறம், சீர்த்தி, பகலவன், மகிழன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், செயலாளர் விஜய் உத்தமன் வேலூர் பாண்டு, பி.சி. ஜெயராமன், நா. தமிழினியன், கே.என். துரைராஜ் திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் தே. ஒளிவண்ணன், ஏ. மணிவண்ணன், பெரு. இளங்கோவன், ந. ராஜேந்திரன், மணி காளிப்பன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், ஓவியர் ஜனாதிபதி, ப. சக்ரவர்த்தி, வடகரை உதயகுமார், பொன்னேரி வே. அருள், ராணி, பவதாரணி, மோகனப் பிரியா, தங்க. தனலட்சுமி, சுமதி கணேசன், த. மரகதமணி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தோழர்கள் ஜனார்த்தனன், செல்லப்பன், சேரன், பாலு மணிவண்ணன், க. இளவழகன், பூஜா, மாணிக்கம், சோமசுந்தரம் மற்றும் பெரியார் திடல் அனைத்துப் பிரிவு பணித் தோழர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
தந்தை பெரியார் நினைவுநாளையொட்டி இன்று தந்தை பெரியார் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.டி.எஸ்.சி. பிரிவின் தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையில் பெருந்திரளான தோழர்கள் அணி வகுத்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க.
ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களின் தலைமையில் அதன் நிர்வாகிகள் தோழர்கள் அணிவகுத்து வந்து பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துமரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்களின் தலைமையில் தோழர்கள் பெருந்திரளாக வந்து பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தெலங்கானா தோழர்கள்
தெலங்கானாவில் இருந்து பெருந்திரளான தோழர்கள் அணி வகுத்து வந்து அமைதிப் பேரணியில் பங்கேற்று நினை விடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கருத்தரங்கம்- நூல் வெளியீடு
தந்தைபெரியார் 50 ஆண்டு ஆண்டு நினைவு நாளில் Ôதந்தைபெரியார் விட்டுச்சென்ற பணிகளும் தொடரும் அறைகூவல்களும்Õ தலைப்பில் கருத்தரங்கம் இன்று (24.12.2023) காலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் வரவேற்றார்.
கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, பொன்னேரி வி.பன்னீர்செல்வம், ஆ.வெங்கடேசன், செல்வ.மீனாட்சிசுந்தரம், கோ.ஒளிவண்ணன், அ.தா.சண்முகசுந்தரம், ந.கரிகாலன், வழக்குரைஞர் பா.மணி யம்மை, சோ.சுரேஷ், வி.தங்கமணி, செ.பெ.தொண்டறம், தளபதி பாண்டியன், இரா.வில்வநாதன், தாம்பரம் முத்தையன்,எண்ணூர் வெ.மு.மோகன், ஆர்.டி.வீரபத்திரன், வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், சு.அன்புசெல்வன், தே.ஒளிவண்ணன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், விஜய் உத்தமன், க.இளவரசன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையில், தந்தைபெரியார் நினைவு நாள் என்பது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுவதைப்போல ஒரு வரலாற்று குறிப்புதான். பெரியார் மறைந்து விட்டார் இந்த இயக்கமும் மறைந்து விடும் என்று இன எதிரிகள் எண்ணினர். ஆனால், இன்று நாடாளுமன்றத்திலும் பெரியார் இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மாநிலங்களவையில் உரையாற்றியபோது பெரியார் என்று உச்சரித்தபோது நாடாளுமன்றம் அதிர்கிறது. பெரியார் சிலையைக்கண்டு, அவர் கையில் உள்ள தடியைக்கண்டு கூட அஞ்சுகிறார்கள் என்று பல்வேறு தகவல்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
கழகப்பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். தந்தை பெரியார் மனித வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும். கவலை இல்லாமல் இருக்க வேண்டும். மனிதன் அச்சமற்று வாழவேண்டும் என்று தத்துவ விளக்கம் என்கிற தலைப்பில் சேலம் கல்லூரியில் பேசினார். கோயில், மசூதி, சர்ச்சுகளை இடிப்பவர்கள் யார்? வெறுப்பு அரசியலுக்கு மாற்று தந்தைபெரியார் கொள்கைகள் தத்துவங்கள்தான் மதவாதத்துக்கு மருந்து பெரியார்தான் என்றார்.
உலகத் தலைவர் பெரியார் -வாழ்க்கை வரலாறு தொகுதி 8 புத்தகத்தை நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக உறுப்பினர் புதுகை எம்.எம்.அப்துல்லா வெளியிட்டு எழுச்சியுரை ஆற்றினார்.மாநிலங்களவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த விவாதத்தின்போது தந்தைபெரியார் கூறிய கருத்தை எடுத்துக்கூறி மாநில சுயாட்சியை வலியுறுத்தியபோது, குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவையின் அவைத் தலைவரே பெரியார் என்று சொன்னதும் என் பேச்சை நீக்குவதாக கூறிவிட்டார். பெரியார் பெயரை கூறியதுமே பச்சை மிளகாயைக் கடித்ததைப்போல இருக்கிறார்கள். பிஜேபி உறுப்பினர்கள்கூட அமைதியாக இருந்தார்கள், அவைத்தலைவர் ஆவேசமாக நீக்குகிறார். நான் பேசியது மாலை நேரத்தில். மாநிலங்களவைத் தலைவரைக் கண்டித்து காங்கிரசார் வெளிநடப்பு செய்கிறார்கள். நானும் வெளியே வந்தபோது, ஒரு தாயாக சென்னையில் இதே இடத்தில் கூட்டிய கூட்டத்தில் அப்துல்லா பேசியதில் என்ன தவறு என்று கேட்டு ஒரு தாயாக என்னை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரவணைக்கிறார் என்று நன்றியுடனும் பெருமிதத்துடனும் கூறினார். திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு உரை யாற்றினார்.
உலகத் தலைவர் பெரியார் -வாழ்க்கை வரலாறு தொகுதி 8, பெரியார் பற்றி பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?, எனது தொண்டு, ஆசிரியர் தொகுத்தளித்துள்ள பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் ஆகிய புத்தகங்கள் நன்கொடை மதிப்பு ரூ.500. கருத்தரங்க மேடையில் ரூ.100 சிறப்புத் தள்ளுபடியில் ரூ.400க்கு வழங்கப்பட்டது. கழகப்பொறுப்பாளர்கள், கழக ஆர்வலர்கள் வரிசையாக சென்று உரிய தொகை கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஆடிட்டர் இராமச்சந்திரன், பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ், கோ.ஒளிவண்ணன், கு.சோமசுந்தரம், ஆ.வெங்கடேசன், கரிகாலன்,தென். மாறன், பொறியாளர் நாகராஜன், தே.செ.கோபால், தங்க.தனலட்சுமி, சைதை வாசுதேவன், விழிகள் வேணுகோபால், கவிஞர் கண்மதியன், வேலூர் பாண்டு, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ஆவடி தமிழ்மணி, மு.ரா.மாணிக்கம், செல்வ.மீனாட்சிசுந்தரம், அ.தா.சண்முகசுந்தரம், பொறியாளர் ச.இன்பக்கனி, கொரட்டூர் பன்னீர்செல்வம், வெற்றிசெல்வன், சேத்பட் நாகராஜன், அருணாசலம், இளங்கோவன், வெ.மு.மோகன், தொண்டறம் உள்பட பலரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து புத்தகங்களைப்பெற்றுக் கொண்டனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் வட்டித் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள விருப்பத்தைத் தெரிவித்து த.க.நடராசன் அவர் குஞ்சிதம் அம்மையார் பெயரில் அறக்கட்டளை அமைத்திட ரூ.10 லட்சத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருக்கு இயக்க வெளியீடுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பல்வேறு தகவல்களை எடுத்துக்காட்டி பேருரை ஆற்றினார். ஆந்திரா, தெலங்கானா பகுதிகளிலிருந்து முனைவர் பைரி நரேஷ் தலைமையில் மூடநம்பிக்கா நிர்மூலன் சமிதி (எம்.என்.எஸ்.) அமைப்பைச்சேர்ந்தவர்களின் தெலுங்கு மொழி பாடல்களுடன் பகுத்தறிவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால் நன்றி கூறினார்.
தென்சென்னை, வடசென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், சோழிங்கநல்லூர் கழக மாவட்டங்களின் இளை ஞரணி, மாணவர்கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, வழக்குரைஞரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.