பத்தனம்திட்டா, டிச.19- கேரளத் தில் நிலவும் அமைதியான சூழலை சீர்குலைக்க ஆளுநர் முயற்சிக்கிறார் என்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்மொ ழிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு செயல்படுவதாகவும் முதலமைச் சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
புதிய கேரளம் அரங்கின் ஒரு பகுதியாக டிசம்பர் 17 ஞாயி றன்று பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் முதல மைச்சர் மேலும் கூறியதாவது:
தான் கேரள ஆளுநர் என் பதை மறந்து எதை வேண்டு மானாலும் பேசும் நிலைக்கு அவர் சென்றுள்ளார்.
அவரது செயல் இயல்பாக எதிர்ப்பை சந்திக்கிறது. ஒன்றிய அரசின் உதவியுடன் ஆட்கள் கண்டறியப்பட்டு பல்கலைக் கழகங்களில் நியமனம் செய்யப் பட்டனர். ஆர்எஸ்எஸ் முன் மொழிவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அதற்கு எதிரா கவே மாணவர்கள் போராடினர். ஆளுநர், மக்கள் பிரதிநிதியா கவும், அமைச்சராகவும் இருந் துள்ளார்.
மக்களுடன் இணைந்து பணி யாற்றியவர். அப்படியானால், போராட்டக்காரர்களை எப் படி குற்றவாளிகள் என்று சொல்ல முடியும்? ஒரு பொது ஊழியர் போராட்டத்தை இப் படித் தான் அணுக வேண்டுமா?
இது என்ன ஒரு விவேகமற்ற நடவடிக்கை. இவரின் செயலைப் பார்க்கும் எவருக்கும் இவருக்கு என்ன ஆனது என்று ஆச்சரிய மாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளையா அவர் சொன் னார்? ஒவ்வொரு விசயத்திலும் அதிகபட்ச ஆத்திரமூட்டலை உருவாக்க ஆளுநர் முயன்றார்.
தனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவோரை எதிர் கொள்ள இதுவரை எந்த உயர் பதவியில் இருப்பவராவது இது போல் பாய்ந்துள்ளனரா? நமது மாநிலத்தின் அமை தியான சூழலை அழிக்க திட்டமிட்ட முயற்சி நடக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.