புதுடில்லி, டிச.18 எதிர்க் கட்சிகளின் இண்டியா கூட்ட ணியில் பெரிய கட்சியாகஇருந்து அதன் தலைமைக்கு காங்கிரஸ் குறி வைத்திருந்தது. இதற்காக, மபி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ் தானில் இண்டியா கூட்டணி யில் உள்ள ஆம் ஆத்மியும், சமாஜ்வாதியும் கேட்ட ஒரு சில தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுத்தது. ஆனாலும் காங்கிர ஸால் 3 மாநிலங்களிலும் வெற்றி பெற முடியவில்லை. இச்சூழ லில், இண்டியா கூட்டணியுடன் முழுமையாக இணைந்து மக்களவை தேர்தலில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்காக, இண்டியா கூட் டணியில் தோழமைக் கட்சிகள் கேட்கும் தொகுதிகளை காங் கிரஸ் ஒதுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன்மூலம், வெற்றி என்பது உறுதிஇல்லை என்றாலும், குறைந்தபட்சம் பாஜக.வுக்கு தனிமெஜாரிட்டி கிடைக்காதபடி வீழ்த்துவதும் நோக்கமாகி விட்டது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியதாவது:
‘செல்வாக்கான மாநிலங் களில் நாங்கள் சீனியராக இருந்தாலும், அங்கு தாக்கம் கொண்ட இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை. அதேபோல், மாநிலக் கட்சிகள் செல்வாக்குள்ள மாநிலங்களில் எங்களுக்கு கிடைப்பதை பெற் றுக் கொண்டு நாம் ஜுனியர் கூட்டணியாக இருக்க தயாராகி விட்டோம். இந்த தொகுதிகள் உடன்பாடு டிசம்பர் 19 இண் டியா கூட்டணி கூட்டத்தில் துவங் கும் என எதிர்பார்க்கிறோம்.
ராகுலின் இரண்டாவது நடைப் பயணத்துக்கு பதிலாக, உபியில் மட்டும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ராகுலுடன், பிரியங்காவும் இடம்பெறு கிறார். முக்கிய பொதுக்கூட் டங்கள் பெரும்பாலும் இண் டியா கூட்டணியுடன் இணைந்தே நடைபெறும். எங்களது முக்கிய கூட்டணியான திமுகவிடம், அதன்தலைவர்கள் கவனமாக பேசும்படியும் கோரியுள்ளோம். இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் பஞ்சாப், மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஹரியாணா, உத்தரா கண்ட் மற்றும் இமாச்சல் ஆகிய மாநிலங்களில் முக்கிய கட் சியாக காங்கிரஸ்உள்ளது. தென் இந்தியாவில் கர்நாடகா, கேரளா, ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் காங் கிரஸுக்கு செல்வாக்கு உண்டு. இந்த இரண்டின் வடக்கில் 110 மற்றும் தெற்கு மாநிலங்களில் 116 தொகுதிகள் உள்ளன. இத்துடன் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்த்தால் காங்கிரஸுக்கு சுமார் 250 தொகுதிகளில் பாஜகவுடன் அல்லது இண்டியாவில் சேராத கட்சிகளை எதிர்க்க வேண்டி இருக்கும். இதுபோன்ற கார ணங்களால் தனது கொள் கையை காங்கிரஸ் மாற்றியுள் ளதாக கூறப்படுகிறது.