தேடப்பட்ட குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ்.காரர் காவல்துறை அதிகாரி இல்ல நிகழ்ச்சியில்!

1 Min Read
இந்தியா

2020ஆம் ஆண்டு டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்திய மாணவர் சங்க மாணவர்களை பல்கலைக் கழக மாணவர்கள் விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியது ஏபிவிபி என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு. இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தி யவர் கோமல் சர்மா என்ற ஏபிவிபி பிரமுகர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. இன்றுவரை கோமல் சர்மா தேடப்படும் குற்றவாளியாகத்தான் இருக்கிறார். ஆனால் அதே தேடப்படும் குற்றவாளி கோமல் சர்மா டில்லியில் உள்ள திறந்தவெளி அரங்கம் ஒன்றில் உயர் காவல்துறை அதிகாரி வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். உடன் காவல்துறை உயரதிகாரியின் உறவினர்கள் உள்ளனர்.

JNU Attack: Delhi Police Confirm 
Masked Woman Is ABVP …
thewire.in
https://thewire.in › government › jnu-masked-woman-…
15 Jan 2020 – JNU Attack: Delhi Police Confirm Masked Woman Is ABVP Member Komal Sharma. The police have served a notice to Sharma and two others,

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *