அமைச்சர் க.பொன்முடி சகோதரர் விழுப்புரம் டாக்டர் க.தியாகராசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

Viduthalai
1 Min Read

 விழுப்புரம், ஜன. 20- தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்களின் சகோதரரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர். டாக்டர்.பொன்.கவுதமசிகாமணி  அவர்களின் சித்தப்பாவுமான, மறைந்த டாக்டர். க.தியாகராஜன் அவர்களின் உடலுக்கு  கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன்  மரியாதை செலுத்தி அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்ப ராயன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர். அரங்க.பரணிதரன், விழுப்புரம் நகரத் தலைவர் கொ.பூங்கான், விழுப்புரம் மண்டல இளைஞரணித் தலைவர் பகவான் தாஸ், விழுப்புரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.சதீஷ்,  வளவனூர் மாறன், கடலூர் மாவட்ட தோழர்கள் பாவேந்தர் விரும்பி, இந்திரஜித், களத்தூர் அஜய் ஆகியோர் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *