தோழர்களே தயாராகி விட்டீர்களா?

1 Min Read
- Advertisement -

ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிட மாணவர் கழகமும், இளைஞரணி தோழர்களும், இரத்தக் கண்ணீர் வடித்து, வாழ்வா, சாவா என்ற துயர வெள்ளத்தில் துடிக்கும் விவசாயிகள் உரிமை காக்க விவசாய தொழிலாளரணியும் – பத்திரிகையைப் புரட்டினால் பாலியல் வன்கொடுமை! பாலியல் வன்கொடுமை! என்ற செய்தி வெளி வராத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடந்து வரும் வன்கொடுமையை எதிர்த்து கழக மகளிரணி, கழக மகளிர்ப் பாசறையினரும் ஆர்ப்பாட்ட போர்ப் பரணி பாடும் நாள் நாளை மறுநாள் (28.11.2026).

இயக்க வரலாற்றில் மூன்று முக்கிய காரணங்களுக்காக ஒரே நாளில் போராட்டம் என்பது இதுதான் முதல் முறை!

பிரச்சாரம், போராட்டம் என்ற கடிகாரத்தின் ‘பெண்டுலம்’  போல் செயல்படுவதுதான் திராவிடர் கழகத்தின் அணுகுமுறை என்று நமது தலைவர் ஆசிரியர் கூறுவதுண்டு.

பதவி அரசியலுக்குள் காலடிப் பதிக்காமல், இந்த அணுகுமுறையால் நாம் பெற்றிருக்கும் வெற்றி ஒன்றா –இரண்டா – அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமூகநீதி, பெண்ணுரிமை, மொழி உரிமை, தொழிலாளர் உரிமை, சமதர்மம், சமத்துவம், சுயமரியாதை என்ற திசைகளில் நாம் குவித்த வெற்றிகளை வரலாறு தன் சிகரத்தில் பொறித்து வைத்திருக்கும்.

இடையில் ஒரே நாள்தான்! – வரும் சனிக்கிழமை அன்று குறிப்பிடத்தக்கப் போராட்டங்கள், குறிப்பிடப்பட்ட மாவட்டங் களில் நடைபெறும்.

தோழர்களே, தயாராகி விட்டீர்களா – கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து  விட்டீர்களா?

அணி திரள்வீர்!

ஆர்ப்பாட்ட முரசறைவீர்!

அவகாசம் அதிகம் இல்லை. கைப்பேசிதான் எல்லோர் கரங்களிலும் இருக்கிறதே!

கட்டுப்பாடு காத்து, கொள்கை முழக்கமிடுவீர், எட்ட வேண்டிய காதுகளுக்கு எட்டட்டும்!

எந்த ஒரு உரிமையும் விளையாட்டுப் பேச்சால் கிட்டி விடாது – அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டாமா?

அதுதானே நமது வழிமுறை!

கூடுவோம் – குரல் கொடுப்போம்!

வெற்றி நமதே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *