காவிரி விவசாயிகள் கருத்துகளை கேட்க தி.மு.க. சுற்றுப்பயண குழு அமைப்பு

- Advertisement -

சென்னை, நவ. 24- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விவ சாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வறட்சி நிவாரணமும் அறிவிக்கவில்லை.

எனவே, டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் கருத்தை அறிய, திமுக சார்பில் திருச்சி சிவா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏ.கே.எஸ்.விஜயன், துரை சந்திரசேகரன், அருண்நேரு, முரசொலி, செந்தில் செல்வன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

இக்குழு நவ.25 முதல் ஒருவார காலம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தகவல் களைத் திரட்டி வழங்கும். அதில் இருந்து பெறப்படும் கோரிக்கைகள், தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படும்.

அதன் பிறகாவது டெல் டாவைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வரும் என எதிர் பார்க்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *