க. சரஸ்வதி
பொருளாளர், தமிழ்நாடு யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட
சமத்துவம் என்பது இந்திய அரசியலமைப்பின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் சமூகம் ஆழமாகப் பிளவுபட்டிருந்தது. சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பெரும்பான்மை மக்கள் ஒடுக்கப்பட்டிருந்தனர். இதனால், அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவதையே சமத்துவம் என்று அரசியலமைப்பு கருதவில்லை. முற்றிலும் மாறுபட்ட சமூக நிலைகளி லிருந்து தொடங்கியவர்களை ஒரே விதமாக நடத்தினால், ஏற்கெனவே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நிலைத்திருக்கும். இதைச் சரிசெய்ய, வரலாற்று ரீதியாக பின்தங்கிய சமூ கங்களுக்கு உதவும் வகையில் இட ஒதுக்கீடு போன்ற சிறப்பு நடவடிக் கைகளை அரசு மேற்கொள்ள அரசியல மைப்பு அனுமதித்தது.
அனைவரையும் சமமாக நடத்துவதற்கும், கூடுதல் ஆதரவு தேவைப்படுவோருக்கு அதை வழங்குவதற்கும் இடையிலான இந்தச் சமநிலை, 1992ஆம் ஆண்டின் இந்திரா சஹானி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் முக்கியமான சட்டப் போராட்டமாக உருவெடுத்தது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரை களை நடைமுறைப்படுத்தி, சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்தபோது இந்தப் பிரச்சினை தொடங்கியது.
1992 நவம்பர் 16ஆம் தேதி, இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, ‘இந்திரா சஹானி’ எதிர் ‘இந்திய ஒன்றியம்’ (AIR 1993 SC 477) வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய அரசியலமைப்புத் தீர்ப்பாக இது அமைந்தது.
1953ஆம் ஆண்டில், அரசியலமைப் புச் சட்டத்தின் 340ஆம் பிரிவின் கீழ், காகா காலேல்கர் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. அந்த ஆணையம் 1955ஆம் ஆண்டு தனது அறிக் கையைச் சமர்ப்பித்தது. ஆனால், ஆணையத்தின் தலைவர் காகா காலேல்கர் மாறுபட்ட கருத்துக் குறிப்பை அளித்ததால், அன்றைய அரசு இந்த அறிக்கையை நிரா கரித்தது. அடுத்த இருபது ஆண்டு களுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தது. 1979ஆம் ஆண்டு, பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
மண்டல் ஆணையம் 1980ஆம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப் பித்து, சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. அந்த அறிக்கை பத்து ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.
அதை நாடாளுமன்றத்தில் வைப் பதற்கும், அமல்படுத்துவதற்கும் திராவிடர் கழகம் முன்னின்று இந்தியா முழுமையும் இருந்த பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத் தலை வர்களையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்தது. திராவிடர் கழகத்தின் சார்பில் 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளை யும் நடத்தியது.
இறுதியாக, சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான ஒன்றிய அரசு, 1990 ஆகஸ்ட் மாதம் 27% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அலுவலகக் குறிப்பாணையை வெளி யிட்டது. இதற்கு எதிராக வடநாடு முழுவதும் போராட்டங்களைப் பார்ப்பனர்கள் தூண்டி விட்டனர். கடுமையான சட்டச் சவால்களை உருவாக்கினர். பல மனுக்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அரசு வெளியிட்ட 27% இடஒதுக் கீடு ஆணையின் சட்டபூர்வத் தன் மையை மட்டும் விசாரிப்பதற்கு பதிலாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கருத்துகளையும் கோட் பாடுகளையும் ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் பொறுப்பையும் உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. முதலாவதாக, அரசியலமைப்புச் சட்டம் 16(4)ன் கீழான இடஒதுக்கீடு, சம வாய்ப்புக்கான விதிக்கு, விதி விலக்கா அல்லது சமத்துவத்தின் ஓர் அங்கமா என்பது ஆராயப்பட்டது. “பிற்படுத்தப்பட்ட வகுப்பு” என்பதன் பொருள் என்ன, அத்தகைய வகுப்பினரை அடையாளம் காண ஜாதியை அடிப் படையாகக் கொள்ளலாமா என்பதும் பரிசீலிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் பொருளாதார ரீதியாக வசதி பெற்ற, சமூக ரீதியாக முன்னேறியவர்களை இடஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்க வேண்டுமா என்பதும் முக்கிய மான கேள்வியாக எழுப்பப்பட்டது.
மேலும், மொத்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டலாமா, பதவி உயர்வுகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கலாமா என்பதையும் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் 16(4) மட்டுமே வழிவகுக்கிறதா? மண்டல் ஆணையத்தின் அறிக் கையை நடைமுறைப்படுத்திய 1990ஆம் ஆண்டின் அரசாணை அரசியலமைப்பின்படி செல்லத்தக்கதா என்பதையும் நீதிமன்றம் ஆய்வு செய்தது.
இரு தரப்பினரின் வாதங்கள்:
இரு தரப்பினரும் (அரசு மற்றும் வழக்கு தொடுத்தோர்) நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
அதிக அளவில் இட ஒதுக்கீடு வழங்குவது, மற்றவர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள சம வாய்ப்புக்கான அடிப்படை உரிமையைப் பாதிக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். பிற்படுத்தப்பட்ட நிலையை வரையறுக்க ஜாதியை அடிப்படையாகக் கொள்வதும் தவறானதும் நியாயமற்றதும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மறுபுறம், நீண்ட காலமாக நிலவி வந்த சமூக அநீதிகளைச் சரிசெய்ய இடஒதுக்கீடு அவசியம் என்று அரசு வாதிட்டது. சமூக நிலைகளில் பெரும் ஏற்றத் தாழ்வுகளுடன் வாழும் மக்களை ஒரே மாதிரியாக நடத்துவது உண்மையான நியாயமாகாது என்றும் அரசு சுட்டிக்காட்டியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
1992 நவம்பர் 16ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கியது. முக்கியமாக நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி எழுதிய இந்தத் தீர்ப்பு, இன்றளவும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வழிநடத்தும் மூன்று முக்கியக் கோட்பாடுகளை முன்வைத்தது:
- 27% இடஒதுக்கீடு செல்லத்தக் கது: ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
- கிரீமிலேயர்’ நீக்கம்: பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்குள் பொருளாதார ரீதியாக வசதி பெற்றும் சமூக ரீதியாக முன்னேறியும் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு பயன்கள் கிடைக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது. இதன் மூலம் உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கு இட ஒதுக்கீடு பயன்கள் சென்றடையும் எனக் கருதப்பட்டது.
- 50% உச்சவரம்பு: மொத்த இடஒதுக்கீடு பொதுவாக 50 சதவிகிதத் தைத் தாண்டக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அனுமதித்தாலும், மொத்த ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்ற தீர்ப்பு தமிழ்நாட்டின் 69 சதவிகித இடதுக் கீட்டை பாதித்தது. கிரிமீலேயர் நீக்கம், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு விரோதமாக அமைந்தது.
இந்தத் தீர்ப்பில் இருந்து எழும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பின ரின் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மறுபரிசீலனை செய்தல்
மாநிலங்களின் உண்மையான மக்கள் தொகை அமைப்பு, சமூகச் சூழலுக்கு ஏற்ப இடஒதுக்கீடு விகிதங் களை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் இருக்க வேண்டும்.
கிரீமிலேயர் கருத்தை ஒழித்தல்
ஓபிசி பிரிவினருக்கு விதிக்கப்படும் கிரீமிலேயர் அளவுகோல்களையும், குறிப்பாகச் சம்பளம் மற்றும் வேளாண் வருமானத்தைக் கணக்கில் சேர்ப்பதையும் கடுமையான பணவரம்பு களைப் பயன்படுத்துவதையும் சமூகநீதிக்காகப் போராடுவோர் கடுமையாக எதிர்க்கின்றனர். இத்தகைய அளவுகோல்கள், தகுதியுள்ள ஓபிசி விண்ணப்பதாரர்கள் பொதுத்துறை வேலைவாய்ப்புகளையும் உயர்கல்வி வாய்ப்புகளையும் பெறுவதிலிருந்து அநியாயமாக விலக்கப்படுவதற்குக் காரணமாகின்றன; இதனால் அய்.அய்.டிக்கள், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் நிரப்பப் படாத பின்னடைவுக் காலியிடங்கள் அதிகரிக்கின்றன..
அரசியலமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்புகள், பிற்படுத்தப்பட் டோருக்கு நியாயமான பிரதிநிதித்துவத் தையும், உண்மையான வாய்ப்புகளை யும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
