காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
அய்தராபாத், நவ. 14- தெலங்கானா அரசு நடத்தும் பாரத் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வர இருந்த 115 வெளிநாட்டு பேச்சாளர் களுக்கு ஒன்றிய அரசு விசா மறுத்துள்ளதாக சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானா அரசு நடத்தும் 2 நாள் பாரத் உச்சி மாநாடு அய்தராபாத்தில் நேற்று (13.11.2026) தொடங்கியது. இதில், 70 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப் பாளர்கள், கல்வியாளர்கள், தொழில் துறையினர் வருகை தர இருப்பதாக ஏற்கெனவே காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான சசி தரூர், மாநாட்டுக்கு அழைக் கப்பட்ட 315 வெளிநாட்டு பேச் சாளர்களில் 115 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பாரத் உச்சி மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட 315 பேச்சாளர்களில் 115 பேருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அல்லது அவர்களின் விசா ரத்து செய்யப் பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இது நடந்ததாகத் தெரிகிறது. எந்த சட்ட விதியின் கீழ் அரசாங்கம் இத்தகைய கடுமையான நட வடிக்கையை எடுத்தது என்பது தெளிவாக தெரியவில்லை. மாநாடு நாளை முடிவடைய உள்ள நிலையில் இந்த முடிவை மாற்றி அமைப்பதும் சாத்தியமற்றது.
ஒரு பெருமைமிக்க ஜனநாயக நாடு, விமர்சனங்களை முன் வைக்கக் கூடும் என்று அஞ்சும் குரல்களை ஒடுக்கும் அளவுக்கு பாது காப்பற்ற நிலைக்கு மாறி இருப்பது மிகவும் வருத்த மளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
‘‘பாரத் உச்சி நாட்டில் பங்கேற்க இந்தியா செல்ல வேண்டாம்’’ என்று இந்திய தூதரகம் தனக்கு அறிவுறுத்தியதாக நார்வே நாட்டைச் சேர்ந்த பத்திரி கையாளர் ஹெல் லிங் கூறி இருந்த நிலையில், சசி தரூர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், தெலங்கானா காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளருமான சமலா கிரண் குமார் அழைக்கப்பட்டவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் விசா தொடர்பான சிக்கல்களால் இந்தியாவுக்கு பயணம் செய்ய முடியவில்லை என தெரிவித்திருந்தார். இன்று (14.11.2026) நடைபெற நிறைவு நாள் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
