மேகதாது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம்

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 14- காவிரி விவகாரத்தில், உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், இனியும் தமிழ்நாடு அரசு மவுனம் காக்கக் கூடாது என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

மேக்கேதாட்டு அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையிலேயே கருநாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய வற்றை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் எழுதியிருக் கும் கடிதத்தில், காவிரி விவகா ரத்தில் கருநாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் பேசி வரும் நிலையில், நமது விவசாயிகளைக் காப்ப தற்காகத் தமிழ்நாட்டின் கட்சி களும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியம் என்பதை நான் வலியுறுத்தி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தேன்.

மேக்கேதாட்டு அணை கட்டும் பிரச்சினையை நடுவர் மன்றத்துக்கு அனுப்ப வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய போது, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்பதைச் சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தி, சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரிடம் அளிப்போம் என்றும் தெரிவித்தார்.

கருநாடக முதலமைச்சர் மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து மீண்டும் தீவிரமாகப் பேசத் தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், இனியும் தமிழ்நாடு அரசு மவுனம் காக்கக் கூடாது. எனவே, நமது ஒற்றுமையையும் கருநாடக முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று இக்கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், மேகதாது அணைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை யும், தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காவிரி உரிமையைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக நிற்பது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

பல்வேறு விவகாரங்களில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது காவிரி விவகாரத்தில் நேரடியாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *