‘‘ஸ்பாட்லைட்’’
‘‘ஆதிதிராவிடர்களான மக்களுக்குப் பெரியார் என்ன செய்தார்?’’ என்று புதிய தலைமுறை ‘ஜென்-சி’களைத் திசை திருப்பும் வகையில் ஒரு புரட்டுப் பிரச்சாரத்தைப் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். அதற்கு கிடைத்த சில கூலிப் பட்டாளங்களை வைத்துச் செய்கிறது. விஷமத்தனமாக இப்படிக் கேட்போர் பிறக்காத காலத்தில், ‘பெரியார் அனைவருக்கும் உரியார்’ என்றாலும், ஒடுக்கப்பட்டவர்களிலேயே அதிலும் ஆதிதிராவிடர்களுக்கு ‘முன்முன்’ உரிமை என்பதைத் தந்தை பெரியார் எப்படி கருதி இருந்தார் என்பதற்கு ஒரு சில தகவல்கள்:
‘‘தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாருக்கு முக்கியமானதொரு கடனாகும்; ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந் தான் பார்ப்பனரல்லாதாரின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பம்தான் பார்ப்பனரல்லாதாரின் துன்பமா கும். தீண்டாமை ஒழிவதன் மூலமாகத்தான் பார்ப்பனரல்லாதார் கடைத்தேற முடியும்.’’
– 1925 இல் பெரியார்.
‘‘தஞ்சை மாவட்டத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட சத்திரங்களில் ஏழை மாணவர்கள் கல்வி கற்க மானியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைப் பார்ப்பனர்களே ஏகபோகமாக அனுபவித்து வருகிறார்கள்.
பார்ப்பனருக்குத் தனியிடமும், பார்ப்பனரல்லாதா ருக்குத் தனியிடமும் ஒதுக்கி வைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் இப்போது
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பொறுப்பில் உள்ளது.
அவர் பார்ப்பனரல்லாதாருக்கு நியாயம் செய்வாரா?’’ என்ற கேள்வியை ‘குடிஅரசு’ ஏட்டின்மூலம் எழுப்பினார் தந்தை பெரியார்.
இதன் விளைவாக, அனைவருக்கும் கதவு திறந்துவிட்டார்!
‘‘தஞ்சாவூர் ஜில்லா போர்டு தஞ்சாவூர் சத்திரத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச சாப்பாடு வசதியுடன் தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்படும். தேவைப்படுவோர் விண்ணப்பிக்கவும் – விளம்பரம் அறிவிப்பு.’’
சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தை ஏன் தந்தை பெரியார் ‘திராவிட லெனின்’ என்று அறிவித்தார் என்பது புரிகிறதா?
பெரியாரை மறக்கலாமா?
பெரியார் போராட்டத்தை மறுக்கலாமா?
உணருங்கள், உண்மையை உணருங்கள்!
(தொடரும்)
