எரியும் பொருள்: தமிழ்நாடு காவல்துறை அகராதியில் புதிய பெயர் சேர்ப்பு!

- Advertisement -

நுங்கம்பாக்கம், புஷ்பா நகரில் வசிக்கும் இரண்டு மாணவிகளை அடிக்கடி அவர்களது ஆண் நண்பர்கள் பார்க்க வருவதாக அப்பகுதி யில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடியிருப்புப் பகுதிக்கு எதிரே எரியும் பொருள் வீசப்பட்டதில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லேசாகச் சேதமடைந்தன. இந்நிகழ்வில் தொடர்புடைய சூரஜ் என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். தலைமறை வாக உள்ள மற்றொரு நபரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல்துறை யினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிகழ்வு தொடர்பாகப் பொது மக்கள் தவறான தகவல்களையோ அல்லது வதந்தி களையோ பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
பெட்ரோல் குண்டு என்று செய்திகள் வெளிவந்த நிலையில், அதற்கு ‘எரியும் பொருள்’ என்று புதிய பெயர் சூட்டியுள்ளது காவல்துறை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோயிலில் அர்ச்சகர்கள் நகைகளைத் திருடியதாக வழக்கு வந்தபோது, அதைத் திருட்டு என்று கூறாமல், ‘கோயில் நகை எடை குறைந்த வழக்கு’ என்று செய்தி வெளியிட்டது மக்களிடையே கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *