சென்னை, நவ.9 மூடநம்பிக்கைப் பண்டி கையான தீபாவளியால் சுற்றுச்சூழல் மாசு வர லாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
- காற்று மாசு
- வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது
- புதுடில்லி
- சென்னையில் 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!
- 600 தூய்மைப் பணியாளர்கள்
- 350 வாகனங்கள்
- பட்டாசு வெடித்ததால் 1,116 பேர் காயம் – தீயணைப்புத்துறை தகவல்
- காயம்
- சிகிச்சை
- பட்டாசு தீப்பொறி பட்டு இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது!
- வீடு முழுவதும் எரிந்து நாசம்!

காற்று மாசு
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது
தீபாவளிப் பண்டிகையையொட்டி இரவு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதன் காரணமாக, சென்னையின் காற்று மாசு வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட காற்று தரக் கண்காணிப்பு முடிவுகளின்படி, காற்று மாசு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது:
சைதாப்பேட்டை: அதிகபட்சமாக 302 (மிகவும் மோசம்) தரமணி & ஈக்காட்டுத் தாங்கல் 286. தியாகராய நகர் 283. நேற்றி ரவு சுமார் 11 மணியளவில் சென்னை யின் ஒட்டுமொத்தக் காற்றின் தரம் 1,084 என்ற நம்ப முடியாத உச்சத்தைத் தொட்டு பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது இதன் அளவு சற்று குறைந்து, சராசரியாக 254 என்ற அளவில் ஆபத்தான பிரிவி லேயே தொடர்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்று மாசின் இந்த அதீத அதிகரிப்பு காரணமாகச் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்வ தைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
புதுடில்லி
நாடு முழுவதும் தீபாவளி என்ற பெயரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்ட நிலையில், தலைநகர் டில்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் தொடர்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடு முழுவதும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியதால் தலைநகர் டில்லியில் பட்டாசு வெடிக்கப்பட்டதன் எதிரொலியாகவும், குளிர்காலச் சூழலின் காரணமாகவும் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (8.11.2026) காலை நிலவரப்படி, டில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவிலேயே நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் சிரமப்பட்டு வருகின்றனர்.
போபால், மும்பை, பெங்களுரு, சென்னை, அய்தராபாத், சண்டிகர், ராய்ப்பூர், கொல்கத்தா, கட்டாக் உள்ளிட்ட பெருநகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாகப் போய்விட்டது.
சென்னையில் 200 டன்
பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!
பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!
தீபாவளியைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னையில் இதுவரை சுமார் 200 டன் பட்டாசுக் கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரி வித்துள்ளனர். மேலும், இக் கொண்டாட்டங்க ளின் தொடர்ச்சியாக வரவிருக்கும் நாட்களில் மேலும் 200 டன் வரை பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
600 தூய்மைப் பணியாளர்கள்
பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்த பிறகு தெருக்களிலும், சாலை ஓரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிதறிக்கிடக்கும் பட்டாசுக் கழிவுகளை உடனடியாக அகற்றும் பணியில் மாந கராட்சியின் சார்பில் சுழற்சி முறையில் மொத்தம் 600 தூய்மைப் பணியாளர்கள் முழுவீச்சில் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிகாலை வேளையில் தொடங்கும் இவர்களின் தூய்மைப் பணிகள், நகரின் மூலை முடுக்குகளெல்லாம் துப்புரவு செய்யப்படும் வரை இடைவிடாமல் தீவிர மாக நடைபெற்று வருகின்றன.
பட்டாசுக் கழிவுகளைக் கையா ளும்போதும், அகற்றும்போதும் ஏற்படும் எவ்வித எதிர்பாராத விபத்துகள் மற்றும் பாதுகாப்புச் சவால்களைத் தவிர்க்கும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பு ஏற்பாடுகளையும் நடைமுறைப் ப்படுத்தியுள்ளது.
350 வாகனங்கள்
சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவு களை உடனுக்குடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, குறிப்பிட்ட செயலாக்க மய்யங்களுக்கு எடுத்துச் செல்ல மாநகராட்சி முழுவதும் 350 தனி வாகனங்கள் ஈடு படுத்தப்பட்டுள்ளன.
பட்டாசுக் கழிவுகள் மற்றும் எஞ்சிய வெடிமருந்துப் பொருட்கள் சிதறாமல் பாதுகாப்பாகச் சேகரிக்கப்படுவதற்காக, பணியாளர்களுக்கு 30,000 தனித்துவப் பைகள் வழங்கப்பட்டு, அவற்றின் மூல மாகத் துல்லியமாகச் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்குப் பின்னால், நகரத்தின் தூய்மையைப் பாதுகாக்கும் இப்பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைகளுக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பட்டாசு வெடித்ததால் 1,116 பேர் காயம் – தீயணைப்புத்துறை தகவல்
நாடு முழுவதும் நேற்று (8.11.2026) தீபாவளி கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவ லான மழை பெய்த நிலையில், பட்டாசு விற்பனையும் மந்தமாக இருந்தது.
காயம்
இதனிடையே தீபாவளியின்போது தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் தொடர்ச்சியாக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக இது வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 104 அவசர அழைப்புகள் பெறப்பட்டிருப்பதாகவும், அதே போல் இதர தீ விபத்துகள் தொடர்பாக 56 அவசர அழைப்புகள் என மொத்தம் 160 அவசர அழைப்புகள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை
அதில் குறிப்பாக, தமிழ்நாடு முழு வதும் தீபாவளியின்போது ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக 1,116 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 597 ஆண்கள், 98 பெண்கள் மற்றும் 290 குழந்தைகள் என மொத்தம் 985 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருப்பதாகவும், 103 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 19 குழந்தைகள் என 131 பேர் பட்டாசு தீக்காயம் தொடர்பாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தீயணைப்பு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு தீப்பொறி பட்டு இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது!
ஆவடி பேருந்து நிலையம் அருகே தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசில் இருந்து வெளியான தீப்பொறி, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீ மளமளவென பரவி வாகனம் முழு வதும் எரியத் தொடங்கியது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பட்டாசு தீப்பொறியால் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடு முழுவதும் எரிந்து நாசம்!
சிவகங்கை மாவட்டம் காரையூர் அருகே இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியில் தீபாவளி பலகாரங்கள் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதமானது.
இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் முதற்கட்டமாக 112 பேருக்கு தொகுப்பு வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக அவர்கள் குடியிருந்த வீடுகள் முழுவதும் இடிக்கப்பட்டு அதில் 100 நபர்களுக்கு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 38 நபர்களுக்கு பின்னர் வீடு கட்டி தரப்படுவதாக கூறிவந்த நிலையில் அனைத்து வீடுகளையும் இடித்து விட்டதால் அங்கு வசித்த மக்கள் அருகில் தகர கொட்டகைகள், ஓட்டுக் கொட்டைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்காலி கமாக தகரத்தால் வீடு அமைத்து அங்கு வாழ்ந்து வரும் துர்வாசன் – சசிகலா குடுபத்தினர் தீபாவளிக்காக பலகாரம் சுட்டு கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக எரிவாயு உருளையில் இருந்து நெருப்பு பிடித்துள்ளது. அது மளமளவென பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது.
அப்போது பலகாரம் சுட்டுக் கொண்டி ருந்த சசிகலாவின் குழந்தைகள் நெருப்பு பிடித்து எரிவதை பார்த்து அலறியடித்து வெளியே வந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு அழைத்துள்ளனர் அதற்குள் வீடு முழு வதுமாக எரிய ஆரம்பித்து விட்டது. இளை ஞர்கள் சிலர் சிலிண்டரை வெளியில் தூக்கி வந்து பெரும் விபத்தை தடுத்து நிறுத்தினர்.
குடங்கள், வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து நெருப்பை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. பின்பு தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிறு தூறலாக மழை பெய்து பொதுமக்கள் விரைந்து தீயை அணைப்பதற்கு உதவியது. இருப்பினும் வீட்டில் இருந்த துணிகள், நகைகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து முழு வதும் சேதமடைந்தன. அதேபோன்று அருகில் இருந்த ஜெகநாதன், சூர்யகலா ஆகியோரின் வீட்டு பொருள்களும் எரிந்து சேதுமடைந்ததால் இந்த இரு குடும்பத்தினர் மிகவும் துயரத்தில் உள்ளனர்.
