ராமன் கோயில் நன்கொடைத் திருட்டு பிரதமர் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் மவுனம் காப்பது ஏன்?

- Advertisement -

ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடில்லி, நவ.9 அயோத்தி ராமன் கோயிலுக்கு வழங்கப் பட்ட நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளில் முறைகேடு நடந்துள்ளதாகத் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இது மிகப்பெரிய “நம்பிக்கைத் துரோகம்” என்று வர்ணித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் மவுனம் காப்பதன் மூலம் திருடர்களுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறார்களா என்று அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

தமது ‘எக்ஸ்’ தளப் பதிவில் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட் டுள்ளதாவது:

‘‘கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல’’ என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தத் திருட்டை மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் சந்தேகங்களை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நன்கொடை கள் திருடப்பட்ட இந்தச் பாவச்செயலை மறைப்பதற்கு முதல் நாளில் இருந்தே தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர் பாக முழு உண்மையும் வெளிவர வேண்டும் என்றும், குற்றவாளிகள் கடுமையான தண்டனை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி ஜெய்ராம் ரமேஷ் அரசுக்கு மூன்று கேள் விகளை முன்வைத்துள்ளார்:

போதிய நடவடிக்கை இல்லையா?

இந்த வழக்கில் வெறும் 8 பேர் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது போதுமானதா?

சுதந்திரமான விசாரணை தேவையல்லவா? அறக்கட்ட ளையின் ஒட்டுமொத்த நிதி மேலாண்மை குறித்து ஏன் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்படக்கூடாது? உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மேலும் விசாரணை நடத்தி, இதில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து அரசு ஏன் பின்வாங்குகிறது?

ராமன் கோயில் நிதி மேலாண்மை மற்றும் நன் கொடை முறைகேடு புகார்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகள் அரசியல் வட் டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *