பழங்குடியின மொழிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தச் சான்றிதழ் வகுப்புகள் ரூ.89.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ 7- பழங்குடியின மொழிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வும், மாணவர்களிடையே விழிப்பு ணர்வினை ஏற்படுத்தவும் சான்றிதழ் வகுப்புகள் நடத்துவதற்கு ரூ.89.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர் பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், பழங்குடியின மொழிகள் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பழங்குடியினர் ஆய்வு மய்யம் மூலம் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்பட்டு, பழங்குடியின மொழிகளின் தொன்மை மற்றும் தனித்துவத்தைப் பரவலாக்கம் செய்து, மொழிப் பாதுகாப்பில் இளம் தலைமுறையினரின் பங்க ளிப்பை அதிகரித்து, அழிந்து வரும் மொழியியல் மரபுகள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஏழு பழங்குடியினர் சமூகங்களை மய்யமாகக் கொண்டு பழங்குடியின மொழிகள், கலாச்சார பாரம் பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மூடுல் (Moodle) அடிப்படையிலான கற்றல் மேலாண்மை முறை (LMS) மூலம் “இருளர், பெட்டக் குறும்பர், வொக்ரி போலி, கோத்தர், காணி, சோளகர், பாலியர் மொழிகள், சமூகம் மற்றும் கலாச்சாரம்” தொடர்பான 16 வார சான்றிதழ் வகுப்புகளை பழங்குடியினர் ஆய்வு மய்யம் மூலம் நடத்துவதற்காக ரூ.89,50,000/- (ரூபாய் எண்பத்தொன்பது லட்சத்து அய்ம்பதாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஏழு பழங்குடியின சமூகங்களின் முக்கியமான சமூக மற்றும் கலாச்சார நிறுவனங்களை அடையாளம் காணுதல், அவர்க ளின் பேச்சு, சடங்கு நடை முறைகள் மற்றும் கலாச்சார பாரம் பரியங்களுக்கு இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ளுதல், பழங்குடி வாய்மொழி செயல் திறனின் தனித்துவமான அம்சங்களையும் கலாச்சார அடையாளத்தில் அதன் பங்கை பகுப்பாய்வு செய்தல், பழங்குடியின மொழிகளின் தலைமுறை வழிப் பரிமாற்றம் தொடர்பான தற்காலிக சவால்களைப் புரிந்துகொள்ளுதல் மூலம் பழங்குடியின மொழிகளின் சமூகப் பங்களிப்பின் முக்கியத்து வத்தை மேம்படுத்த இயலும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *