விருதுநகரில் கனிம வளக் கொள்ளைகளைத் தடுக்க 40 கண்காணிப்புக் குழுக்கள்

- Advertisement -

விருதுநகர், நவ. 7- விருதுநகர் மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க துணை வட்டாட்சியர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 40 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான குவாரிகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் விதிமுறை மீறல்கள் நடப்பதாகவும், கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், குவாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் துணை வட்டாட்சியர்கள் தலைமையில் வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளர், விஏஓ, கிராம உதவியாளரும், ஊரக வளர்ச்சித் துறையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளர், பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் கொண்ட 40 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கனிம வளங்கள் தொடர்பான விதிமீறல்களை கண்காணித்து, முக்கியமான சட்ட விரோத கனிம கொள்ளை தொடர்பாக பெறும் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நிகழ்வு இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யவும், முறையான கால இடைவெளியில் ரோந்து மற்றும் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இப்பணிகளை மேற்பார்வை செய்யவும் ரோந்துக் குழு முறையாக ஆய்வுக்கு செல்வதை கண்காணிக்கவும் அன்றாட அறிக்கை பெற்று உரிய மேல் நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியர், கோட்டாட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், சிறீவில்லிபுத்தூர், வத்திரா யிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய வட்டாரங்களில் 7 பேர் கொண்ட தலா 4 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இக்குழுவினர், சட்டவிரோதமாக கனிமங்களை அகழ்ந்து எடுத்துச் செல்வது தொடர்பாக கண்காணிக்கவும், குவாரிகள், கனிம சேமிப்பு மற்றும் ஏற்றுமதிக்குக் கொண்டு செல்லும் பகுதிகளில் உரிய அனுமதிகள் மற்றும் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மற்றும் வாகன தணிக்கை மேற்கொள்ளுதல், சட்ட விரோதமாக கனிமம் எடுக்கப் பட்டாலோ கடத்தப்பட்டாலோ சட்டப் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *