சுப்ரியா தருண்லேகா,
மேற்கு வங்கம்

- சுப்ரியா தருண்லேகா,
- மேற்கு வங்கம்
- பகுத்தறிவு கருத்துகளை ஊக்குவிப்பதும், பரப்புவதும் மட்டுமின்றி…
- கடைசி நிமிட அனுமதி மறுப்பால்…
- புத்தக அரங்குகள் மீது தாக்குதல்களைத் தொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன!
- மனிதச் சங்கிலி அமைத்து…
- ‘‘ஜெய் சிறீ ராம்’’ என்று முழக்கமிட்டுக் கொண்டாடியதாக புகார்கள் எழுந்துள்ளன!
- சரியான எதிர்வினையாக இருக்க முடியும்!
- காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் குற்றச்சாட்டு!
- விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன!
(கட்டுரையாளர், தந்தை பெரியாரின் நூல்களை வங்காளத்தில் மொழியாக்கம் செய்தவர். தன் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை நீக்கி, தன் தாய், தந்தையின் பெயரை ஒன்றிணைத்து, ‘தருண்லேகா’ என்று சேர்த்துக் கொண்டவர்).
சத்யஜித் ரேயின் புகழ்பெற்ற வங்கமொழித் திரைப்படம் ஹிராக் ராதேஷேஜர் (ராஜா ஹிராக் மோசமான மன்னர்). அதில் வங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த ஹிராக் என்ற மன்னர் தனது ஆட்சியின் கீழ் வரும் பகுதிகளில் அனைத்து நூல்களையும் எரித்துவிடவேண்டும் என்று ஆணை பிறப்பிப்பான்.
அந்தத் திரைப்படத்தில், ஹிராக் மன்னனின் சர்வாதிகார ஆட்சி, காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். மக்கள் தன்னை எந்தவொரு கேள்வியும் கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும் என்கின்றார். பள்ளிக்கூட ஆசிரியரான உத்தம் பண்டிட்டின் கற்பித்தல் முறை களும், சுதந்திரமான, பகுத்தறிவு சார்ந்த பார்வையும் மன்னனின் சர்வாதிகார முறைக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன;
ஏனெனில் கல்வியும், பகுத்தறிவும் பெற்ற மக்களை அவ்வளவு எளிதில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது. இதனால், தனது ஆட்சிப் பகுதியில் உள்ள அனைத்துப் பகுத்தறிவு நூல்களையும் எரிக்க மன்னன் உத்தரவிடுகிறான்.
2026 ஆம் ஆண்டில் தற்போது, ‘ஹிராக் ராஜர் தேஷே’ திரைப்படத்தின் அந்தப் கற்பனைக் காட்சி மேற்குவங்கத்தில் உண்மையாக நடைபெறுகிறது.
துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுவது வங்காளத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தில் நீண்டகாலமாகக் பரிச்சயமான ஓர் அம்சமாகும். பூஜை பந்தல்களுக்கு அருகில் வைக்கப்படும் முற்போக்குப் புத்தகங்கள், வாசகர்களின் கூட்டங்கள், புதிய வெளியீடுகளுக்கான தேடல்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான பரிமாற்றங்கள் என பல தலைமுறைகளாக பெங்காலி விழாக் கால அனுபவத்தின் ஓர் அங்கமாக இவை உள்ளன.
பகுத்தறிவு கருத்துகளை ஊக்குவிப்பதும், பரப்புவதும் மட்டுமின்றி…
சமூக, அரசியல், பகுத்தறிவு கருத்துகளை ஊக்கு விப்பதும், பரப்புவதும் மட்டுமின்றி, சாமானிய மக்களுக்குப் புத்தகங்களை எளிதில் கிடைக்கச் செய்வதிலும் கூட இந்தப் புத்தக அரங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இருப்பினும், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நிலைமை மோசமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு துர்கா பூஜை திருவிழாவின் போது, தலித் இலக்கியம், பகுத்தறிவு, இடதுசாரி அமைப்புகளால் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தக அரங்குகள் மீது தடைகளும், சூறையாடலும் தீ வைப்புத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
மேற்குவங்கத்தின் நீண்ட காலக் கலாச்சாரம் பாசிச ஹிந்துத்துவ அரசியலுடன் நேரடி மோதலுக்குள்ளாக்கி யுள்ளன.

கடைசி நிமிட அனுமதி மறுப்பால்…
இந்த ஆண்டு துர்கா பூஜை திருவிழாக்களின் போது, வட 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜெசூர் சாலையில் புத்தக அரங்கு (ஸ்டால்) அமைப்பதற்கான கடைசி நிமிட அனுமதி மறுப்பால், சிபிஎம், பிற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக அரங்கம் மூடப்பட்டது
இது குறித்து அக்டோபர் 15 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா எதிர்க்கட்சிகளின் குரல்கள் அடக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும், புத்தக அரங்குகள் தடை செய்யப்பட்டது குறித்து விளக்கம் கோரியதாகவும் கூறப்படுகிறது. புத்தக அரங்குகள் நடத்த அனுமதிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புத்தக அரங்குகள் மீது தாக்குதல்களைத் தொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன!
எனினும், திருவிழாக்கள் தொடங்கியதும், நீதி மன்றத்தின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர்கள் புத்தக அரங்குகள் மீது தாக்குதல்களைத் தொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. பல்வேறு இடங்களில் அரங்கேறிய வன்முறைகள் ஊடகச் செய்திகள் மற்றும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களின் அறிக்கைகளின்படி, கொல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதி களிலும் இடதுசாரி புத்தகக் கூடங்களை அமைப்பதில் பதற்றங்கள் உருவாகியுள்ளன.
தாகுரியா, காஸ்பா, அஹிரிடோலா, எண்டாலியில் உள்ள காமர்தங்கா, வட கொல்கத்தாவின் ஜோராபகன் மற்றும் பெஹாலா பூர்பா சட்டமன்றத் தொகுதியின் ஜோகா பகுதிகளில் புத்தக அரங்குகள் மீது சூறையாடல், புத்தகங்களைக் கிழித்து வீசிய காணொலிகள் வந்துள்ளன.
ஜோகா பகுதியிலிருந்து பா.ஜ.க. தொண்டர்கள் புத்தகங்களைக் கிழித்து வீசிக் காலில் போட்டு மிதித்துள்ளனர்
அந்தப் புத்தகங்களில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர், விவேகானந்தர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் படைப்புகளும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழ கத்திற்கு அருகிலுள்ள 8–பி பேருந்து நிலையம் அருகில் உள்ள புத்தகக் கூடம் தொடர்பான நிகழ்வில், அந்த புத்தக அரங்குகளை இடிப்பதற்காக நகராட்சி குப்பை அகற்றும் வாகனமும், ஒரு ‘புல்டோசரும்’ இரவில் அதிகாரிகளால் அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
மனிதச் சங்கிலி அமைத்து…
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, முற்போக்குச் செயற்பாட்டாளர்களும், வாசகர்களும் மனிதச் சங்கிலி அமைத்து, அதைப் பாதுகாக்கும் முயற்சியில் இரவு முழுவதும் அங்கேயே தங்கினர். அதிகாலை வேளையில் தங்களுக்கும், காவல் துறை மற்றும் நிர்வாகத் பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த அரங்கு இடிக்கப்படாமல் தப்பியதாகக் கூறப்படுகிறது. வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சமூகச் செயற்பாட்டாளர்கள் புத்தகங்களை வழங்கியதைத் தொடர்ந்து, அடுத்த நாள் மாலை வரை அங்கு புத்தக விற்பனை தொடர்ந்தது.
மேற்குவங்கத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதாகக் கூறப்படு கிறது. அவுரா மாவட்டத்தில் உள்ள சிப்பூர் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள பிராதி, பட்வரா மற்றும் நைஹாட்டி ஆகிய இடங்களில் இடதுசாரி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கூடங்களைச் சூறையாடவோ, தாக்கவோ அல்லது தீ வைக்கவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புர்தவான் மாவட்டத்தில் ஏழு அல்லது எட்டு இடங்களில் புத்தகக் கூடங்கள் சூறை யாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேதினிபூர் மற்றும் துர்காபூரிலும் இதே போன்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. காஞ்சரபராவில், புகார்தா ரர்களால் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர்கள் என்று வர்ணிக்கப்பட்ட நபர்களால் புத்தக அரங்குகள் ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
‘‘ஜெய் சிறீ ராம்’’ என்று முழக்கமிட்டுக் கொண்டாடியதாக
புகார்கள் எழுந்துள்ளன!
புகார்கள் எழுந்துள்ளன!
வங்காளத்தில் நிலைமை எந்த அளவிற்குச் சென்றுள்ளது என்றால், வித்யாசாகர், காஜி நஸ்ருல் இஸ்லாம், விவேகானந்தர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் புத்தகங்களைக் கிழித்து, கால்களால் மிதித்து, ‘‘ஜெய் சிறீ ராம்’’ என்று முழக்கமிட்டுக் கொண்டாடியதாகக் கூறப்படும் புகார்கள் எழுந்துள்ளன. கார்ல் மார்க்ஸ், விளாடிமிர் லெனின் எழுதிய புத்தகங்களும் கிழிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று ஆளுமைகளின் அரசியல் சித்தாந்தம் ஒன்றாக இல்லை. அவர்களின் வாழ்க்கை, கருத்துகள் மற்றும் செயல்பாட்டுப் புலங்களும் ஒன்றல்ல. இருப்பினும், அவர்களின் எழுத்துகள் அவமதிக்கப்படுவது, வங்காளத்தின் சமூக, அறிவுசார் மற்றும் அரசியல் வரலாற்றில் அவர்கள் அனைவரும் முக்கியமான இடங்களைப் பிடித்துள்ளனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் காலனி ஆதிக்க அதிகாரிகளால் தடை செய்யப்பட்ட சரத்சந்திர சட்டோபாத்யாயின் ‘பதேர் தாசி’ நாவல்கூட பார்ப்பனிய மற்றும் பாசிச சக்திகளால் கிழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் புத்தகக் கூடங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களில் பலர் வங்காளி ஹிந்துத்துவ அமைப்பினர் என்றும் கூறப்படுகிறார்கள்.
சரியான எதிர்வினையாக
இருக்க முடியும்!
இருக்க முடியும்!
ஜனநாயகக் கலாச்சாரமும் கருத்துரிமையும் மக்களுக்குக் கேள்வி கேட்கக் கற்றுக் கொடுக்கும் புத்தகங்கள், சமூக அநீதியையும் சமத்துவமின்மை யையும் வெளிப்படுத்தும் இலக்கியங்கள், மற்றும் நிறுவப்பட்ட அதிகாரங்களின் வர்ணனைகளுக்கு அப்பால் உண்மைகளை வழங்கும் வரலாற்றுப் படைப்பு களின் முக்கியத்துவம் அரசியல் அடையாளங்களைத் தாண்டியதாகும். உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற செவ்விலக்கியங்களுக்கும் இது பொருந்தும். ஒரு புத்தகத்தில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளுடன் மக்கள் உடன்படவில்லை என்றால், நியாயமான வாதங்கள், விவாதங்கள், விமர்சனங்கள் மற்றும் எதிர்-வெளியீடுகள் மூலம் ஈடுபடுவதே சரியான எதிர்வினையாக இருக்க முடியும்.
புத்தகங்களை நிலத்தில் வீசுவது, மிதிப்பது அல்லது தீயிட்டுக் கொளுத்துவது ஆகியவை ஜனநாயகக் கலாச்சாரத்திற்கு அடிப்படையில் முரணானவையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(a) அனைத்துக் குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.
காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் குற்றச்சாட்டு!
இந்த உரிமை ஒருவர் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை உள்ளடக்கியது. புத்தகங்களை எழுதுவது, வெளியிடுவது, அச்சிடுவது மற்றும் விநியோகிப்பது ஆகியவை கருத்து சுதந்திரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும், மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் இது அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜக அரசாங்கத்தின் கீழ் உள்ள வங்காளக் காவல்துறை, எதிர்வினை ஹிந்துத்துவ சக்திகள் என்று வர்ணிக்கப்படும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும், புத்தக அரங்குகள் சூறையாடப்படும் நிகழ்வுகள் நடந்த போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
வரலாற்றின் எச்சரிக்கையும் தற்போதைய சூழலும் ஏழு மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த பாஜக அரசாங்கத்தின் கீழ் வங்காளத்தில் கருத்துச் சுதந்திரமும், ஜனநாயக வெளியும் பாதுகாக்கப்படுவதை இந்தச் சம்பவங்கள் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
இந்த அரசாங்கம் ஹிந்தி பேசும் பெருநிலப்பரப்புடன், குறிப்பாக உத்தரப்பிரதேசத்துடன் தொடர்புடைய அரசியல் மற்றும் கலாச்சார மாதிரியை மேற்குவங்கத்தில் இறக்குமதி செய்ய முயல்கிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். வரலாறு ஓர் அச்சுறுத்தும் இணக்கத்தைக் காட்டுகிறது.
மே 10, 1933 அன்று, நாஜி அமைப்புகள் பல ஜெர்மன் நகரங்களில் புத்தக எரிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தன. அமெரிக்க ஹோலோகஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தின்படி, யூத எழுத்தாளர்கள், அமைதிவாதிகள், சோசலிஸ்டுகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் நாஜி சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத கருத்துகளைக் கொண்ட பிற எழுத்தா ளர்களின் படைப்புகளை இலக்காகக் கொண்டது.
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன், ஹெலன் கெல்லர், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட் மற்றும் ஹென்ரிச் ஹெய்ன் போன்றோரின் புத்தகங்கள் இலக்காக்கப்பட்டன. நாஜி ஆட்சி இந்தப் புத்தக எரிப்புப் பிரச்சாரங்களை ஆதரித்தது, அவை அறிவுசார் சுதந்திரம், சுதந்திரமான சிந்தனை மீதான அதன் தாக்குதலின் அடையா ளங்களாக மாறின.
விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன!
இப்போது வங்காளத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால், மாநிலத்திலும் இந்தியா முழுவதும் உள்ள பலரும் வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அத்தகைய ஒப்பீடுகள் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும், இருப்பினும் புத்தகக் கூடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள், கருத்து வேறுபாடுகளை ஒடுக்கும் மற்றும் கருத்துகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்தச் சூழலில், ஜெர்மன் கவிஞர் ஹென்ரிச் ஹெய்ன் கூறியதாக அறியப்படும் பிரபலமான எச்சரிக்கையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்: “எங்கு அவர்கள் புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கு இறுதியில் மனிதர்களையும் எரிப்பார்கள்.” புத்தகங்கள் மற்றும் அறிவுசார் சுதந்திரம் மீதான தாக்குதல்கள் மனித மாண்பு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சிந்தனைச் சுதந்திரம் மீதான பரந்த தாக்குதலின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதை இந்த எச்சரிக்கை ஒரு முக்கியமான நினைவூட்டலாகத் தொடர்கிறது.
