பாதிக்கப்பட்டவரின் மீது பொய் வழக்கு காவல் ஆய்வாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ.4- போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக அளிக் கப்பட்ட புகாரை, திரும்பப் பெறக்கோரி மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகாரில் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர்கள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனி, குமரன் காலனியில் 1,800 சதுர அடி நிலத்துக்கு போலியான சில ஆவணங்கள் தயாரித்ததாக எஸ். சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வடபழனியைச் சேர்ந்த பால்துரை உட்பட 3பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பால்துரை முன்பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், பால்துரை மீதான புகாரை விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த முன்பிணை மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பால்துரைக்கு எதிரான புகாரை திரும்பப் பெறும்படி புகார்தாரர் சூர்யாவை காவல் ஆய்வாளர் மிரட்டிய தாகவும், அதை ஏற்காத சூர்யா மீது பால்துரை மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு தொடரப்பட்டது என்றும், அந்த வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், முன் பிணை கோரி பால்துரை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர்களான முனிசேகர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தர விட்டுள்ளார்.

கோயம்பேடு காவல் மாவட்ட எல்லையை தவிர்த்து இணை ஆணையர் தகுதியில் உள்ள அதிகாரி மூலம் காவல் ஆய்வாளர்கள் இருவருக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்தி டிசம்பர் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *