தமிழ்நாட்டில் ‘வரலட்சுமி விரதம்’ போல, வட இந்தியாவில் பெண்களால் கொண்டாடப்படும் பண்டிகை ‘கர்வா சவுக்’. துர்காஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி நாளில், பெண்கள் நாள் முழுவதும் ‘விரத’மிருந்து, மாவு சலிக்கும் சல்லடை வழியாக, நிலவையும், பின்னர் தங்கள் கணவரின் முகத்தையும் பார்த்து ‘விரத’த்தை முடிப்பார்கள்.
இதனால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாறாக, இந்த விரதத்தை அரை குறையாக விட்டால், கணவரின் ஆயுள் விரைவில் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையும் உண்டு.
இந்நிலையில், டில்லியின் புகர் பகுதியான நிஹால் விஹாரில் உள்ள சிறீராம் காலனியில் விசித்திரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
வெளியூரில் வேலை பார்த்துவிட்டுச் சில ஆண்டுகள் கழித்து வீடு திரும்பிய கணவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே திடீரெனக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கர்வா சவுக்’ பண்டிகையன்று மனைவி விரதம் இருந்தபோதிலும், கண வருடன் ஏற்பட்ட கோபத்தால், ‘‘நான் நில வையும், உன் முகத்தையும் பார்த்து விரதத்தை முடிக்க மாட்டேன்’’ என அடம்பிடித்துள்ளார்.
மனைவியின் இந்த முடிவால் அதிர்ச்சி யும், பயமும் அடைந்த கணவர், ‘விரதம்’ அரைகுறையாக நின்றால், தனது ஆயுளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில், உடனடியாக டில்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற நிஹால் விஹார் காவல் நிலையக் காவல்துறையினர் மற்றும் மூத்த அதிகாரிகள் உட னடியாக நிகழ்விடத்திற்கு விரைந்தனர். கணவன் – மனைவி இருவரிடமும் பொறுமையாகப் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களுக்குள் இருந்த பிணக்கைத் தீர்த்து வைத்தனர். காவல்துறையின் சுமுகமான தலையீட்டைத் தொடர்ந்து, அந்தப் பெண் அனைத்துப் பாரம்பரியச் சடங்குகளையும் முறைப்படி செய்து தனது ‘விரத’த்தை நிறைவு செய்தார்.
கணவனின் நீண்ட ஆயுளுக்காகப் பெண்கள் விரதமிருக்கும் சூழலில், ‘‘நீ சீக்கிரம் செத்துப் போக வேண்டும்’’ என்று கூறி விரதத்தை முடிக்க மறுத்த மனைவியும், உயிருக்குப் பயந்து காவல் நிலையத்தை நாடிய கணவரின் செயலும் அப்பகுதியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், எத்தனையோ முக்கியக் குற்றங்களை விசாரிக்கும் காவல்துறையினர், இணையரின் குடும்பப் பிரச்சினையில் தலை யிட்டு, மனைவியின் ‘விரத’த்தை முடித்து வைத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் சுவாரசி யமான செய்தியாக விவா திக்கப்பட்டு வருகிறது.
இன்றைக்கு என்ன சமையல், என்ன கூட்டு? காய்கறியா, மாமிச உணவா? என்பது வரை இனி காவல்துறை தலையிட்டுதான் தீர்த்து வைக்கவேண்டும் போலும்.
பாழாய்ப்போன மதமும், விரதமும், சடங்குகளும் பகுத்தறிவுக்கு விரோத மானவை என்பது மட்டுமல்ல; எவ்வளவுக் கீழ்த்தரமானவை என்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்கட்டும்!
வைக்கத்தில் மனித உரிமைப் போராட்டம் நடத்தி, சிறைப்பட்ட தந்தை பெரியார் மரணம் அடையவேண்டும் என்று ‘‘சத்ரு சங்ஹார யாகம்’’ நடத்தினார்கள். ஆனால், நடந்தது என்ன? மகாராஜாதான் மரணமடைந்தார் என்பதையும் நினைவூட்டுகிறோம்!
அறிவையும், காலத்தையும், பொருளையும் நாசப்படுத்தும் கடவுள், மத நம்பிக்கைகளைத் தூக்கி எரியும்வரை, மனிதன் வளர்ச்சி பெற மார்க்கம் இல்லை – இல்லவே இல்லை!
