சென்னை, நவ. 2- இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் ஒன்றிய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற வரும் 30-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவள்ளூர் ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-2027ஆம் ஆண்டுக்கு தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவித்துள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த தகுதியான மாணவ, மாணவியா்கள் கல்வி உதவித்தொகை (புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சம் 9,10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000 மற்றும் 11,12 ஆம் வகுப்பு பயில்வோருக்கு ரூ.1.25,000-வரை உதவித் தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதையடுத்து கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை டிச.15 -ஆம் தேதி சரிபார்க்க கடைசி நாளாகும்.
நிபந்தனைகள்: மாணவ, மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் அல்லது சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-2026ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஒன்றிய அரசால் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்ற பள்ளிகளில் பயில்கிறவராக இருக்க வேண்டும்.
நிகழாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயில்வோர் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும். 2026-2027ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தகுதியானோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளார்.
