த.வெ.க. அரசில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இன்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் சென்னையில் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தலைமையில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம்

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 1 த.வெ.க. அரசை கண்டித்து சென்னையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசுகையில் பெண்களின் பாதுகாப்புக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டம்

த.வெ.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது

ஆட்சிப் பொறுப்புக்கு வரும் முன்னே இது நாடா, காடா என அன்புத்தம்பி, ‘ஸ்வீட் ப்ரோ’ விஜய் கேட்டார். ‘‘பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்’’ என சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டார். பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் 20-க்கும் மேற்பட்ட த.வெ.க. நிர்வாகிகள் உள்ளனர். த.வெ.க. ஆட்சிக்கு வந்தபின் 700 கொலைகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 400-ம் நடந்துள்ளன. இதுவரை 50-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தப்பியோடி யுள்ளனர். இதுதான் சட்டம்-ஒழுங்கு நிலைமை.

ஆட்சிக்கு முடிவு கட்டுதல்

தேர்தல் நேரத்தில் விஜய் அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் என வாக்கு சேகரித்தார். ஆனால் இன்று எத்தனை குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஆட்சிக்கு விரைவில் நாம் முடிவு கட்டவேண்டும். முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இவர்கள் ஆண்டால் தமிழ்நாடு இருண்ட காலத்திற்குத் தள்ளப்படும் என்பது தெளிவாகிவிட்டது. இவர்களை வீட்டிற்கு அனுப்படுவதை தவிர வேறு பாதுகாப்பு இல்லை. தி.மு.க. ஆட்சியில் கல்வி, சுகாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் இன்று த.வெ.க. ஆட்சியில் அனைத்திலும் தமிழ்நாடு பின்னுக்குவந்துவிட்டது. ஆனால் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றத்திலும் முதல் இடத்தில் வந்துவிட்டோம். இந்தியாவில் உணவுப் பொருட்கள் விலைவாசி அதிகமாக உள்ளதில் முதல் இடத்தில் தமிழ்நாடு வந்துவிட்டது.

‘பெப்பர் ஸ்பிரே’

பெண்களின் பாதுகாப்புக்கு அண்ணன் சீரில் புடவையோடு ‘பெப்பர் ஸ்பிரே’யும் முதலமைச்சர் விஜய் கொடுங்கள். (அப்போது பெப்பர் ஸ்பிரேவை கையில் ஏந்தி உயர்த்தி காண்பித்தார்.) ரேசன் கடை மூலம் ஒவ்வொரு பெண்களுக்கும் ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்குங்கள். பெண்களை இந்த அரசும், காவல்துறையும் யாரும் காப்பாற்ற போவதில்லை. அதுவாவது எங்களை காப்பாற்றட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. பேசு கையில், “இந்த இயக்கம் வழக்குகளுக்கு அடிபணிந்து விடாது. வழக்குகளை காட்டி பயமுறுத்திவிட முடியாது –- எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்டரீதியாக எதிர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.” என்றார். மேலும் அவர் அளித்த பேட்டியில், த.வெ.க. ஆட்சியில் குழந்தைகள் முதல் 80 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை. இதுவரை 10 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர்.

முழக்கங்கள்

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, பேச்சாளர் வனிதாகுமார் உட்பட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். பெண்கள் பலர் கருப்பு நிற சேலை அணிந்து கலந்து கொண்டனர்.

இதேபோல சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மருத்துவ அணி தலைவர் கனிமொழி சோமு உட்பட மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *