டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அய்.டி.பி.அய். (IDBI) வங்கி பங்கு விற்பனையில் வெளிப்படைத்தன்மை இல்லை – மோடி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி! அய்.டி.பி.அய். வங்கியின் 60.72% பங்குகளை கனடாவின் பேர்பாக்ஸ் (FAIRFAX) நிறுவனத்திற்கு ₹53,000 கோடிக்கு விற்பனை செய்யும் முடிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் நலன் முரண்பாடுகள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் ஞானேஷ்குமார் நீடிக்க முடியாது – ராகுல் காந்தி திட்டவட்டம்! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான மக்கள் குற்றஞ்சாட்டு கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் ராகுல் காந்தி பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியின் மாபெரும் பேரணி – தலைவர்கள், தொண்டர்கள் குவிந்தனர்! மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது; சி.ஜே.பி. மற்றும் மாணவர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தி இந்து:
* சமூகம் கேள்வி கேட்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் – நீதிபதி உஜ்ஜல் பூயான்! அறிவியல் மனப்பான்மையும் பகுத்தறிவும் அவசியம்; கேள்விகளை எதிர்க்கும் சமூகங்கள் தவறான தகவல்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் எளிதில் பலியாகிவிடும் என உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை.
தி டெலிகிராப்:
* எதிர்க்கட்சிகளை ‘அறிவுசார் நக்சல்கள்’ என விமர்சிப்பதற்கு கபில் சிபல் கண்டனம் – மோடி எதிர்க்கட்சிகளை ‘தடுப்புக் கட்சி’ என விமர்சனம்! எங்களை ‘அறிவுசார் நக்சல்கள்’ என்கிறார்கள்; ஆனால் அவர்கள் அரசியலமைப்பையும் மக்களின் உரிமைகளையும் வாக்குரிமையையும் தகர்க்கும் ‘அறிவுசார் புல்டோசர்கள்’ என கபில் சிபல் பதிலடி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘ஏற்கெனவே வேரறுக்கப்பட்டுவிட்டனர்’ – அமித் ஷாவின் ‘அங்கதன் கால்’ கருத்துக்கு அகிலேஷ், அவதேஷ் பதிலடி! உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகள், கொலைகள் அதிகரிப்பது குறித்தும், தாழ்த்தப்ட்ட மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது குறித்தும் உள்துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என அகிலேஷ் விமர்சனம்.
– குடந்தை கருணா
