சென்னை, அக்.31- விவசாயிகள் ஒன்றிய- மாநில அரசுகளின் சலு கைகளைப் பெற, உரங்கள் வாங்கிட, பயிர் காப்பீடு செய்திட, அடையாள அட்டையை கட்டாயப்படுத்தி, விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நவம்பர் 4 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது:
நாடு முழுவதும் ஒன்றிய – மாநில அரசுகள் செயல்படுத்திடும் விவசாய திட்டங்களின்சலுகைகளை பெற வும், உரங்களை வாங்கிடவும், பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்திற்கும் விவசாய அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 86 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இவர்களில் கணிசமான வர்கள் கோவில், மடம், இனாம் உள்ளிட்டவைகளில் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். மேலும் அரசு புறம்போக்கு மற்றும் பல்வேறு வகைப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும் பகுதி உள்ளனர். வனங்கள், மலை அடிவாரம் ஆகிய நிலங்களில் சாகு படி செய்யும் பல லட்சம் விவசாயி கள் உள்ளனர். மேலும் ஒத்திக்கு நிலங்களை பெற்று சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசின் விவசாய அடையாள அட்டை, நிலத்திற்கான பட்டா யாரிடம் உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 36 லட்சம் விவசாயிகள் மட்டுமே விவசாயிகள் அடையாள அட்டை (Farmer ID) பெற்றுள்ளனர். விவசாயஅடையாள அட்டை கட்டாயம் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் அமல்படுத்தினால் லட்சக்கணக்கான விவசாயிகள் (குத்தகை, ஒத்தி, அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்வோர்) அடையாள அட்டையை பெற முடியாத நிலை ஏற்படும். அரசின் எந்த சலுகைகளையும் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
எனவே, மாநில அரசு, ஒன்றிய அரசின் அடையாள அட்டை கட்டா யம் என்ற திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தாமல், பழைய முறைப்படியே விவசாயிகள் அரசின் சலுகைகளை பெற அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி 4.11.2026 அன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட, ஒன்றிய அளவி லான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த போராட்டத்தில் அனைத்து பகுதி விவசாயிகளும் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றிட வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
