பா.ஜ.க.வின் மாதிரி நாடாளுமன்றம் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல் : ஜெய்ராம் ரமேஷ்

- Advertisement -

புதுடில்லி, அக். 31- டில்லியில் உள்ள என்.டி.எம்.சி கூட்டரங்கில் ‘ஜனநாயகம் vs அராஜகம்’ என்ற தலைப்பில் பாஜவின் ஆதரவு பெற்ற ‘சிட்டிசன்ஸ் ஃபார் டெமாக்ரசி’ என்ற குழுவின் சார்பில் மாதிரி நாடாளுமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் மூத்த அரசியல் தலைவர்களைப் போல வேடமிட்டு, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அரசியல் மற்றும் அரசி யலமைப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ”பாஜ இது போன்று ஒரு நாடாளுமன்றத்தை நடத்தியதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளு மன்றத்தை தொடர்ந்து கேலி கூத்தாகவே மாற்றி வருகின்றனர்.

முக்கிய மசோதாக்களை விவாத மின்றி அவசரகதியில் நிறைவேற்றுவது, மக்கள் நலன் சார்ந்த அவசரப் பிரச்சினைகள் மீதான விவாதங்களை மறுப்பது மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தற்பெருமை பேசும் தளங்களாக மாற்றுவது என அவர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற நிறுவனங்களை சிறுமைப்படுத்தி வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசியபோது, ‘‘கடந்த 12 ஆண்டுகளாக நாடாளு மன்றத்தையே கேலிக்கூத்தாக மாற்றிவிட்டு, தற்போது பாஜவின் ஆதரவு பெற்ற அமைப்புகள் மாதிரி நாடாளுமன்றம் நடத்துகின்றன. மேலும், முதலில் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தை ஒரு ரப்பர் ஸ்டாம்பாகப் பயன் படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கினார்கள். இப்போது மக்க ளாட்சியை கொடூரமாகக் கேலி செய்யும் வகையில் இது போன்ற நாடாளுமன்றத்தை நடத்துகின்றனர்” என தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *