சென்னை, அக்.28- அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்ய 31ஆம் தேதி கடைசி நாளாகும். அதில் தங்க நகைகள் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்தியப்பணி அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து விவரங்களை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்து வருகின்றனர். இதேபோல், தமிழ்நாடு அரசு ஊழியர்களும் தங்களது அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை ஆண்டு தோறும் தாக்கல் செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி அனைத்துத்துறை செயலா ளர்கள் மற்றும் அரசு துறைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பினார். அதில், அகில இந்தியப்பணி அதிகாரிகள் நீங்கலாக, அரசு ஊழியர்கள் அனைவரும் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி தங்களிடம் உள்ள சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாடு அரசு ஊழியர்கள், களஞ்சியம் இணையத்தில் 3 படிவங் களில் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதில் முதல் படிவத்தில் நில, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். இரண்டாவது படிவத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், தங்க நகைகள், வங்கி வைப்புகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். மூன்றாவது படிவத்தில் கடன்கள் மற்றும் பிற நிதிப் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். இந்த 3 படிவங்களிலும் கேட்கப்பட்ட விவரங் களைப் பூர்த்திசெய்தபிறகு, அவற்றை சரிபார்த்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். பின்னர் உறுதிமொழி அளித்து இறுதியாகச் சமர்ப் பிக்கவேண்டும். சமர்ப்பித்த விவரங்களுக்கான அறிக்கையைப் பதி விறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த சொத்து விவ ரங்கள் பதிவு செய்வதற்கு 31ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர் நடத்த விதிகளை மீறியச் செயல்படுவதாக கருதப்படும். மேலும், விவரங்களைத் தாக்கல் செய்த தேதி, ஊழியர்களின் ஆண்டு பணிப்பதிவுகளில் குறிப்பிடப்படும்.
பதவி உயர்வுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக் கும்போதும் இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இனிவரும் ஆண்டு களில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்களை, அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதில் இணையத்தில் பதிவு செய்யும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், எனவே காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
