தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்குக் கனிமங்களை எடுத்துச் செல்லத் தடை! மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவு!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக் 27- தமிழ்நாட்டில் கிடைக்கும் கனிம வளங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் பயன்பாட்டைச் முறைப்படுத்தவும் இயற்கை வளங்கள் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டு செல்வதற்கான தடையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:

கட்டுமானப் பணிகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன. இத்தகைய மதிப்புமிக்க கனிம வளங்களை முறைகேடின்றி முறையாக நிர்வகிப்பதும், பயன்பாடு தொடர்பான விதிமுறைகளைச் சீராகச் செயல்படுத்துவதும் அரசின் முதன்மைப் பொறுப்பாகும்.

மாநிலத்தின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்கவும் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தடைக்காலம் முடிவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டு, விலையேற்றமும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *