புதுடில்லி, அக். 27- இந்தியாவில் இணையவழி மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கு நடைமுறையில் உள்ள விருப்ப பயணக் காப்பீடு திட்டம், இன்று (27.10.2026) முதல் ரயில்வே கவுன்டர்களில் (PRS Counters) பயணச்சீட்டு பெறுபவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த புதிய திட்டம் அம லுக்கு வந்துள்ளது.
காப்பீட்டுத் தொகை
எதிர்பாராத விபத்துகள் மற்றும் அசம் பாவிதங்களின் போது ரூ.10 லட்சம் வரை காப்பீட்டு இழப்பீடு பெறலாம்.
ஒரு பயணச்சீட்டு வெறும் 45 பைசா மட்டுமே காப்பீட்டுக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. காப்பீடு பெற விரும்புபவர்கள், பயணச்சீட்டு மற்றும் காப்பீட்டுக்கான தொகை யைக் கட்டாயம் டிஜிட் டல் முறை (Digital Payment) மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
டிஜிட்டல் கட்டணம் கட்டாயமானது ஏன்?
தற்போதைய கால கட்டத்தில் 5, 10, 20 மற்றும் 25 பைசா நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத காரணத்தினால், சில்லறை தட்டுப்பாட்டைத் தவிர்க்க பயணச்சீட்டு கட்டணத்துடன் 45 பைசா பிரீமியம் தொகையைச் சேர்த்து டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களது பயணச்சீட்டை ரத்து செய்யும் பட்சத்தில், வழக்கமான ரத்து கட்டணங்களுடன் சேர்த்து, காப்பீட்டுப் பிரீமியம் தொகையான 45 பைசாவில் இருந்து 9 பைசா பிடித்தம் செய்யப் படுவது குறிப்பிடத்தக்கது.
